ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் புதிய நிர்வாகக் குழு  தெரிவு

Published By: Digital Desk 4

22 Jul, 2018 | 07:48 PM
image

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் 22ஆவது வருடாந்த பொதுக்கூட்டமும் புதிய நிர்வாகத் தெரிவும் நேற்று கொழும்பிலுள்ள அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர்கூடத்தில் நடைபெற்றது.

தலைவர் என்.எம். அமீன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பெருந்தெருக்கள் மற்றும் வீதி அபிவிருத்தி அமைச்சர் ஹபீர் காசிம் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

கௌரவ அதிதிகளாக இராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம். பௌசி, பிரதி அமைச்சர் அலிசாஹிர் மௌலானா, பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், துருக்கி நாட்டின் தூதுவர் துன்கா ஒஸ்சுஹதார், பொதுஜன பெரமுன கட்சியின் தவிசாளர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ், தேசிய ஐக்கிய முன்னணி தலைவர் அசாத் சாலி, சம்மாந்துறை பிரதேசசபை தவிசாளர் நௌசாத் ஆகியோரும் சிறப்பு பேச்சாளராக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநில பொதுச் செயலாளரும் தமிழ்நாடு கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினருமான எம்.ஏ. முஹம்மத் அபூபக்கரும் கலந்துகொண்டனர்.

சமூக மேம்பாட்டுக்கும் இன நல்லிணக்கத்துக்கும் பங்களிப்புச் செய்தமைக்காக மௌலவி ஏ.எல்.எம். இப்றாஹிம், தஹ்லான் மன்சூர் ஆகியோருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. இதுதவிர, நீண்டகாலம் ஊடகத்துறையில் பங்களிப்புச் செய்தமைக்காக தயா லங்காபுர, ரி. ஞானசேகரன், எம்.இஸட். அஹமட் முனவ்வர், எம்.ஐ.எம். சம்சுதீன், மௌலவி எஸ்.எம்.எம். முஸ்தபா, ஹம்ஸா ஹனீபா, ஸக்கிய பரீட் ஆகியோரும் கௌரவிக்கப்பட்டனர்.

அதன்பின்னர் 2018/2020 ஆம் ஆண்டுக்கான புதிய நிர்வாகத்தெரிவு நடைபெற்றது. இதில் தலைவராக என்.எம். அமீன், பொதுச் செயலாளராக ஸாதிக் ஷிஹான், பொருளாராக ஜெம்ஸித் அஸீஸ் ஆகியோர் போட்டியின்றி ஏகமனதாக தெரிவுசெய்யப்பட்டனர். செயற்குழுவுக்காக போட்டியிட்ட 32 பேரை தெரிவுசெய்வதற்கான வாக்கெடுப்பு இலங்கை பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழுவின் பிரதிநிதிகள் தலைமையில் நடைபெற்றது.

இந்த வாக்கெடுப்பில், எம்.பி.எம். பைறூஸ், ரிப்தி அலி, எம்.எப். ரிபாஸ், எஸ்.ஏ.கே. பலீலுர் ரஹ்மான், மௌலவி எஸ்.எம்.எம். முஸ்தபா, எம்.எஸ்.எம். ஸாஹிர், எஸ்.ஏ. அஸ்கர்கான், ஜாவிட் முனவ்வர், ஷாமிலா ஷரீப், ஏ.ஜே.எம். பிறவ்ஸ்;, புர்கான் பீ இப்திகார், ஐ.எம். இர்ஷாத், கலைவாதி கலீல், ஸமீஹா ஸபீர் மற்றும் ஆதில் அலி சப்ரி ஆகியோர் நடப்பாண்டு நிர்வாகத்துக்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44