(எம்.எம்.மின்ஹாஜ்)

மாகாண சபை தேர்தல் முறைமை தொடர்பாக சிறுப்பான்மை இனங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளுக்கிடையில் முக்கிய சந்திப்பொன்று நாளை நடைபெறவுள்ளது.

இதன்படி இந்த சந்திப்பு நாளை மாலை 3 மணிக்கு தேசிய நல்லிணக்க, சகவாழ்வு மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சில் நடைபெறவுள்ளது.

தேர்தல் முறைமை தொடர்பாக இறுதி முடிவு எடுக்கும் நோக்கில் எதிர்வரும் வியாழக்கிழமை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் விசேட சந்திப்பு இடம்பெறவுள்ளது. 

இந்த சந்தப்புக்கு முன்னதாக சிறுப்பான்மை கட்சிகள் அனைத்தும் ஒன்று கூடி தேர்தல் முறைமை தொடர்பாக ஆராயவுள்ளதற்கமைவாகவே மேற்படி சந்திப்பு நாளைய தினம் பிற்பகல் 3 மணியளவில் தேசிய நல்லிணக்க, சகவாழ்வு மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.