(இரோஷா வேலு) 

வெலிகட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இராஜகிரிய பகுதியில் ஆயுர்வதே நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்த விபச்சார விடுதியொன்றை சுற்றி வளைத்த பொலிஸார் இரண்டு பெண்களை கைதுசெய்துள்ளனர்.

இச் சம்பவத்தில் கைதுசெய்யப்பட்ட பெண்கள் கடுகண்ணாவ மற்றும் தெஹிஅத்தகண்டிய பிரதேசங்களைச் சேர்ந்த 39, 43 வயதினையுடையவர்கள் ஆவர்.

இந்நிலையில் இவர்கள் இருவரையும் இன்று அளுத்கடை இலக்கம் 4 நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.