அமைச்சர் அர்ஜுன ரணதுங்க கதிர்காமத்தில் அர்ஜுன எனும் யானையை பார்வையிட்டு ஆசி பெற்றார்.

கதிர்காமத்திற்கு விஜயம் மேற்கொண்ட அமைச்சர் அர்ஜுன ரணதுங்க, அங்கு அர்ஜுன எனும்  அவரது பெரையுடைய யானையை பார்வையிட்டு ஆசி பெற்றார்.

இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவராக அர்ஜுன ரணதுங்க இருந்தபோது, கடந்த 1996 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 17 ஆம் திகதி இலங்கை கிரிக்கெட் அணி உலகக் கிண்ணத்தை கைப்பற்றியது.

இந்நிலையில் உலகக் கிண்ணத்தை வென்ற தினத்தில் குறித்த யானை பிறந்தமையால் அதற்கு அமைச்சர் அர்ஜுன ரணதுங்கவின் பெயரை சூட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.