அமெரிக்காவின் அர்கானஸ் மாகாணத்தை சேர்ந்த முதியவர் ஒருவர், அதே பகுதியை சேர்ந்த 3, 6 வயது சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயன்றுள்ளார்.

அச்சமயத்தில், அக்காமுகனிடம் இருந்து தப்பித்துக் கொள்வதற்காக குறித்த சிறுமிகள் கத்திக் கூச்சலிட்டுள்ளனர். இதனை பார்த்த அவர்களது வளர்ப்பு நாய், அந்த முதியவரின் மேல் பாய்ந்து கடித்து குதறி, சிறுமிகளை சீரழிக்க நினைத்த காமுகனுக்கு  தக்க தண்டனையைக் கொடுத்துள்ளது.

மேலும் அந்த முதியவரின் மர்ம உறுப்பையும் கடித்து, விழுங்கி ஏப்பம் விட்டது. இதனால் ரத்த வெள்ளத்தில் துடித்து கொண்டிருந்த முதியவர் தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

மனிதர்களே காப்பாற்ற முன்வராத இந்த காலக்கட்டத்தில், அச்சிறுமிகளை துஷ்பிரயோகம் செய்யவிடாது வளர்ப்பு நாய் காப்பாற்றிய சம்பவம் பெரும் பரபரப்பையும் வியப்பையும் ஏற்படுத்தியுள்ளது.