கலிபோர்னியாவில் 88வது ஆஸ்கர் விருதுகள் அறிவிப்பு

Published By: Robert

29 Feb, 2016 | 05:39 PM
image

அமெரிக்காவின் கலிஃபோர்னியா நகரில் 88 வது ஆஸ்கர் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.  சினிமா பட உலகின் மிக உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கர் விருது வழங்கும் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த நடிகை மற்றும் சிறந்த டைரக்டர், சிறந்த ஒப்பனை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட உள்ளன. 

ஆஸ்கர் நிகழ்ச்சி தொகுப்பாளர்களில் ஒருவராக இந்தியாவின் பிரியங்கா சோப்ரா இடம் பெற்றிருந்தார்.

விருதுகளின் விபரம்: 

*சிறந்த ஒரிஜினல் திரைக்கதை- ஸ்பாட்லைட்

* சிறந்த தழுவல் திரைக்கதை- தி பிக் ஷார்ட்

* சிறந்த  துணை நடிகை- அலிசியா விகந்தர் ( 'தி டேனிஷ் கேர்ள்' திரைப்படத்துக்காக விருது வழங்கப்பட்டுள்ளது)

* சிறந்த ஆடை வடிவமைப்பு- ஜென்னி பீவன் (மேட் மேக்ஸ்: ஃபியூரி ரோடு)

* சிறந்த தயாரிப்பு வடிமைப்பு - (மேட் மேக்ஸ்: ஃபியூரி ரோடு)

* சிறந்த ஒப்பனை மற்றும் சிகை அலங்காரம்- (மேட் மேக்ஸ்: ஃபியூரி ரோடு)

* சிறந்த ஒளிப்பதிவு- இமானுவேல் லுபெஸ்கி - தி ரெவனன்ட் ( இவர் ஏற்கெனவே பேர்ட்மேன், கிராவிட்டி படங்களுக்காக ஆஸ்கர் பெற்றவர்)

* சிறந்த எடிட்டிங்- மார்கெரட் சிக்ஸல் (மேட் மேக்ஸ்: ஃபியூரி ரோடு)

* சிறந்த ஒலித்தொகுப்பு - மார்க் மாங்கினி மற்றும் டேவிட் வைட் (படம்: மேட் மேக்ஸ்: ஃபியூரி ரோடு)

*சிறந்த ஒலித்தொகுப்புக்காக ஆஸ்கர் விருது பெற்ற மார்க் மாங்கினி, டேவிட் வைட்.| புகைப்படம்: கெட்டி இமேஜஸ்

* சிறந்த ஒலிக் கலவை- கிறிஸ் ஜெங்கின்ஸ், கிரெக் ருடோல்ஃப், பென் ஆஸ்மோ - (படம்: மேட் மேக்ஸ்: ஃபியூரி ரோடு)

* சிறந்த கிராபிக்ஸ் / விஷுவல் எஃபெக்ட்ஸ் - ஆண்ட்ரூ வைட்ஹர்ஸ்ட் , பால் நாரிஸ், மார்க் ஆர்டிங்க்டன், சாரா பென்னட் - எக்ஸ் மாகினா

* சிறந்த அனிமேஷன் குறும்படம் - பியர் ஸ்டோரி

* சிறந்த அனிமேஷன் திரைப்படம் - இன்ஸைட் அவுட்

*விருதுப் பட்டியலில் முதலிடத்தில் 'மேட் மேக்ஸ்: ஃபியூரி ரோடு'

*சிறந்த உறுதுணை நடிகர்: மார்க் ரைலான்ஸ் - படம்: பிரிட்ஜ் ஆஃப் ஸ்பைஸ்

* சிறந்த குறும்படம் (ஆவணப் பட பிரிவு) - எ கேர்ள் இன் தி ரிவர்: தி ப்ரைஸ் ஆஃப் ஃபர்கிவ்னஸ்

* சிறந்த ஆவணப்படம் - ஏமி (படத்தின் இயக்குநர்: ஆசிப் கபாடியா)

* சிறந்த லைவ் ஆக்‌ஷன் குறும்படம் - ஸ்டட்டரர்

* சிறந்த அயல்நாட்டு மொழி திரைப்படம் - சன் ஆஃப் சால் (ஹங்கேரி)

* சிறந்த இசை - எனியோ மோரிகானே - படம்: தி ஹேட்ஃபுல் எய்ட்

* சிறந்த பாடல் - ரைட்டிங்க்ஸ் ஆன் தி வால் - படம்: ஸ்பெக்டர்

* சிறந்த இயக்குநர்: அலயாந்த்ரோ கொன்ஸாலே இன்னாரித்து - தி ரெவனெண்ட்| சென்ற வருடமும் இன்னாரித்து சிறந்த இயக்குநருக்கான ஆஸ்கரை வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

*சிறந்த நடிகை - ப்ரீ லார்சன் - ரூம்' (Room)

* சிறந்த நடிகருக்கான விருது: லியானார்டோ டி காப்ரியோ ( தி ரெவனன்ட்)

* சிறந்த திரைப்படம்: ஸ்பாட்லைட்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புதிய முயற்சியாக முதலில் இரண்டாம் பாகத்தை...

2024-04-18 17:34:41
news-image

சாதிய அரசியலை அலசும் அண்ட்ரியாவின் 'மனுசி'

2024-04-18 17:31:38
news-image

நடிகர் மன்சூர் அலிகான் வைத்தியசாலையில் அனுமதி...

2024-04-18 13:17:36
news-image

சுப்பர் ஸ்டார் ரஜினியின் பாராட்டைப் பெற்ற...

2024-04-17 17:43:13
news-image

இயக்குநர் ஷங்கரின் இல்ல திருமண வரவேற்பில்...

2024-04-17 17:37:23
news-image

சீயான் விக்ரம் நடிக்கும் 'தங்கலான்' திரைப்படத்தின்...

2024-04-17 17:39:11
news-image

வல்லவன் வகுத்ததடா - விமர்சனம்

2024-04-17 17:39:57
news-image

மோகன் நடிக்கும் 'ஹரா' படத்தின் டீசர்...

2024-04-16 17:39:18
news-image

கெட்ட வார்த்தைகளை பேசி ரசிகர்களை வசப்படுத்தி...

2024-04-16 17:43:10
news-image

தமிழர்களின் பாரம்பரிய கலைக்கு ஆதரவளிக்கும் ராகவா...

2024-04-16 17:45:02
news-image

டிஜிட்டல் தள ரசிகர்களின் வரவேற்பை பெறுமா...

2024-04-16 17:45:54
news-image

மே மாதத்தில் வெளியாகும் வரலட்சுமி சரத்குமாரின்...

2024-04-16 17:41:35