சி.எஸ்.என். தொலைக்காட்சி ஊடாக மேற்கொள்ளப்பட்ட சட்ட விரோத செயற்பாடுகள் குறித்து கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள யோஷித்த ராஜபக்ஷ, ரொஹான் வெலிவிட்ட உள்ளிட்ட நால்வரின் பிணை கோரிக்கை மனுக்கள் மீண்டும் இன்று கடுவெல நீதிமன்றத்தில்  விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.  

இதன் போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தான் வழமையாக அணியும் தேசிய ஆடைக்கு மேலாக சட்டத்தரணிகள் அணியும் கறுப்பு நிற கோட்டினை அணிந்து மன்றில் ஆஜரானார். 

மேலும் இன்று யோஷித்த ராஜபக்ஷ வின் சகோதரரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷவும் சமூகமளித்திருந்தார். 

இந் நிலையில் குறித்த பிணை மனு விசாரணை இம்மாதம் 17 ஆம் திகதிக்கு அன்று இடம்பெற்றவேளையிலும் மஹிந்த ராஜபக்ஷ கறுப்பு நிற கோட்டினை அணிந்து நீதிமன்றதிற்கு சமுகமளித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.