"யார்சாகும்பா" என அழைக்கப்படும் பாரம்பரிய மருத்துவ குணம் கொண்ட காளான் தங்கத்தை விடவும் இரண்டு மடங்கு விலை உயர்ந்ததாக காணப்படுகின்றது.

இந்தியாவில் இமயமலை, நேபாளம், தீபெத் மற்றும் பூட்டான் நாடுகளில் மட்டுமே வளரும் இந்த யார்சாகும்பா என்ற காளான் கம்பளிப்பூச்சியை உணவாகக் கொண்டு வளர்கிறது. 

இந்த யார்சாகும்பாவில் வயாகரவாவுக்கு இணையாக பாலுணர்வை தூண்டும் காரணிகளும் ஆஸ்துமா முதல் புற்றுநோய் வரை பல நோய்களை இந்த காளான் குணமாக்க முடியும் என்பதனால்  உலக சந்தையில் இதற்கு கேள்வி அதிகளம்  உள்ளது. 

சீனாவில் உள்ளூர் சந்தையில் இது ஒரு கிராம் 100 டொலருக்கும் கத்மண்டுவில் 45 டொலருக்கும் விற்பனை செய்யப்படுகிறது. அத்துடன் வெளிச் சந்தையில் இதன் விலையானது 1 கிலோகிராம் 18 ஆயிரம் அமெரிக்க டொலர்களாகும். அதாவது கிட்டத்தட்ட இது தங்கத்தின் விலையை விட இரு மடங்கு மதிப்புடையதாகும்.