கிளிநொச்சி கல்வி வலயத்தின் கிராம பாடசாலைகளில் ஒன்றான முட்கொம்பன் பாடசாலை மாணவனுக்கு மாகாண போட்டியில் தங்கப் பதக்கம் கிடைத்துள்ளது.

11 ஆவது மாகாண தடகளப் போட்டியில் முப்பாய்ச்சிலில் முட்கொம்பன் பாடசாலை மாணவன் கே. பவீந்திரன் தங்கப் பதக்கத்தை பெற்றுள்ளார்.  

பாடசாலை வரலாற்றில்  தடகளப் போட்டி ஒன்றில் தங்கப் பதக்கம் பெற்ற முதலாவது பதிவு இதுவாகும். கிராமத்து பாடசாலையான முட்கொம்பன் பாடசாலை மாணவனை மாகாண மட்ட அளவில் தங்கப் பதக்கம் பெற வைத்த அதிபர், பயிற்றுவிபா்பாளர், ஆசிரியர்கள் ஆகியோருக்கு கிராம மக்கள் தங்களின் நன்றிகளை  தெரிவித்துள்ளனர்.

அண்மைய  பதிவுகளின் படி கிளிநொச்சி கிராம பாடசாலை மாணவர்கள்  கல்வி மற்றும் ஏனைய இணைபாட செயற்பாடுகளில்  சாதனைப்படைத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.