தேசிய அர­சாங்­கத்தின் 2016 ஆம் நிதி­யாண்­டுக்­கான வரவு – செலவுத் திட்­டத்தை இரண்டாம் வாசிப்­பாக நேற்று பாரா­ளு­மன்­றத்தில் நிதி­ய­மைச்சர் ரவி கரு­ணா­நா­யக்க சமர்ப்­பித்தார். நேற்று வெள்ளிக்­கி­ழமை பிற்­பகல் 2.04 மணி­ய­ளவில் திட்­டத்தை சமர்ப்­பிப்­ப­தற்கு ஆரம்­பித்த அமைச்சர் சுமார் நான்­கரை மணி­நேரம் அதனை வாசித்து விளக்­க­ம­ளித்தார்.

இதன்­மூலம் முன்னாள் நிதி­ய­மைச்சர் அமரர் றொனி டி மெல்லுக்கு பின்னர் அதி­க­மான நேரத்தை செல­விட்டு திட்­டத்தை சமர்ப்­பித்த நிதி­ய­மைச்­ச­ராக
ரவி கரு­ணா­நா­யக்க காணப்­ப­டு­கின்றார்.


அமைச்சர் வரவு செலவுத் திட்­டத்தை சமர்ப்­பிக்கும் சந்­தர்ப்­பத்தில் ஆளும் கட்­சியின் சார்பில் அமைச்­சர்கள், பிர­தி­ய­மைச்­சர்கள், இரா­ஜாங்க அமைச்­சர்கள் மற்றும் எம்.பி.க்கள் எனப் பலரும் கலந்­து­கொண்­டி­ருந்த போதிலும் எதிர்க்­கட்­சியைச் சேர்ந்த எம்.பி.க்கள் பெரு­ம­ள­வி­லானோர் சபையில் பிர­சன்­ன­மா­கி­யி­ருக்­க­வில்லை.


சபா­நா­யகர் கரு ஜய­சூ­ரிய தலை­மையில் நேற்று இரண்டு மணிக்கு அமர்வு ஆரம்­ப­மா­ன­போது முதற்­கட்டப் பணி­யாக 2016 ஆம் நிதி­யாண்­டுக்­கான வரவு செலவுத் திட்டம் சமர்ப்­பிக்­கப்­ப­டு­வ­தற்கு சபா­நா­யகர் கரு ஜய­சூ­ரிய அனு­ம­தி­ய­ளித்தார்.


வர­வேற்பு
சபா­நா­ய­கரின் அறிப்­பை­ய­டுத்து வரவு செலவுத் திட்­டத்தை சமர்ப்­பிப்­ப­தற்­காக நிதி­ய­மைச்சர் ரவி கரு­ணா­நா­யக்க சபைக்குள் பிர­சன்­ன­மான போது ஆளும் கட்சி,எதிர்க் கட்சி என அனைத்து உறுப்­பி­னர்­களும் மேசையில் தட்டி அமைச்­ச­ருக்கு வர­வேற்­ப­ளித்­தனர்.

திட்டம் சமர்ப்­பிப்பு
மஹிந்த அர­சாங்­கத்­தினை போன்­றல்­லாது நேற்­றைய தினம் வரவு செலவுத் திட்­டத்தை சமர்­பிப்­ப­தற்­காக வரு­கை­தந்த நிதி­ய­மைச்சர் ரவி கரு­ணா­நா­யக்க வரவு செலவுத் திட்ட ஆவணம் அடங்­கிய கைப்­பை­யுடன் சம்­பி­ர­தா­ய­பூர்­வ­மாக வரு­கை­தந்தார். இத­னை­ய­டுத்து சுமார் நான்­கரை மணி நேரம் நின்­ற­வாறு திட்­டத்தை வாசித்து சபைக்குத் தெ ளிவு­ப­டுத்­தினார்.


முன்னாள் நிதி­ய­மைச்சர் அமரர் றொனி டி மெல் வரவு செலவுத் திட்­டத்தை சமர்ப்­பிக்கும் கால­கட்­டத்தில் அவர் அதி­க­மான நேரத்தை எடுத்துக் கொள்­வதை வழக்­க­மாக கொண்­டி­ருந்தார். அதே­போன்­ற­தொரு பின்­பற்­றலை நிதி­ய­மைச்சர் ரவி கரு­ணா­நா­யக்க நேற்று கைக்­கொண்­டி­ருந்தார். . முன்னாள் அமைச்சர் றொனி டி மெலுக்குப் பின்னர் நிதி­ய­மைச்சர் ரவி கரு­ணா­நா­யக்­கவே இவ்­வாறு அதிக நேரத்தைச் செல­வ­ழித்து வரவு செலவுத் திட்­டத்தை சமர்ப்­பித்­துள்ளார்.


வரு­கை­த­ர­வில்லை
நேற்­றைய தினம் வரவு செலவுத் திட்டம் சமர்ப்­பிக்­கப்­படும் சந்­தர்ப்­பத்தில் அமைச்சர் ராஜித சேனா­ரத்ன சபையில் பிர­சன்­ன­மா­கி­யி­ருக்­க­வில்லை. அதே­போன்று மேலும் சில அமைச்­சர்­களும் எதிர்க்­கட்­சியைச் சேர்ந்த அநே­க­மான உறுப்­பி­னர்­களும் சபைக்கு வரு­கை­தந்­தி­ருக்­க­வில்லை.


ஜனா­தி­பதி வருகை
வரவு செல­வுத்­திட்டம் நேற்று பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பிக்­கப்­பட்­டுக்­கொண்­டி­ருந்­த­போது வருகை தந்த ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன பார்­வை­யாளர் கள­ரியில் அமர்ந்து வரவு செல­வுத்­திட்ட உரையை அவ­தா­னித்­துக்­கொண்­டி­ருந்தார். எனினும் வரவு செல­வுத்­திட்ட உரை நீண்­டு­கொண்டு செல்­லவே அவர் சில அமைச்­சர்­க­ளுடன் தேநீர் அருந்­தி­விட்டு அங்­கி­ருந்து வெளி­யே­றினார்.


தாம­த­மான வருகை
நேற்­றைய வரவு செலவுத் திட்ட அமர்­வின்­போது எதிர்க்­கட்சித் தலைவர் இரா.சம்­பந்தன் தாம­த­மா­கவே வரு­கை­தந்தார். சுமார் 2.20 மணி­ய­ளவில் அவர் சபைக்குள் பிர­சன்­ன­மானார். அத்­துடன் மஹிந்த அணியின் பிர­தா­னி­யான விமல் வீர­வன்ச எம்.பி. 2.40 மணி­ய­ளவில் சபைக்கு வரு­கை­தந்து சிறிது நேரத்­தி­லேயே சபை­யி­லி­ருந்து வெ ளியே­றினார்.
முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ அமர்வில் கலந்­து­கொண்­டி­ருந்­த­போதும் அவர் தாம­த­மா­கவே சபையில் பிர­சன்­ன­மா­கி­யி­ருந்தார். பிற்­பகல் 4.55 மணி­யவில் வரு­கை­தந்த அவர் சுமார் 25 நிமி­டங்­களின் பின்னர் சபையை விட்டு வெ ளியே­றினார்.


வெ ளிநாட்டுத் தூது­வர்கள்
தேசிய அர­சாங்­கத்தின் முத­லா­வது வரவு செலவுத் திட்­டத்தைக் அவ­தா­னிப்­ப­தற்­கென வெ ளிநாட்டுத் தூது­வர்கள் பலரும் அதே­நேரம் வெ ளிநாட்டுத் துது­வ­ரா­ல­யங்­களின் உயர் அதி­கா­ரி­களும் அமைச்­சுக்­களின் அதி­கா­ரி­களும் வரு­கை­தந்­தி­ருந்­தனர். எனினும் வழ­மை­போன்று அல்­லாது சபா­நா­யகர் கல­ரியில் அதி­க­மான ஆச­னங்கள் வெறு­மை­யாக இருந்­ததை அவ­தா­னிக்க முடிந்­தது.