"வாகரையில் ஊர்காவல் துறையினருக்கு காணி வழங்கும் செயற்பாட்டை உடனடியாக நிறுத்த வேண்டும்"

Published By: Digital Desk 7

21 Jul, 2018 | 10:04 AM
image

மட்டக்களப்பு மாவட்டத்தின், வாகரையில் ஊர்காவல் துறையினருக்கு காணி வழங்கும் செயற்பாட்டை உடனடியாக நிறுத்த  வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு வாகரைப் பிரதேசத்தில் மாங்கன்று நடுவதற்காக ஊர்காவல் துறையினர் 25 ஏக்கர் காணி கோரியுள்ளனர் இவ்விடயம் தொடர்பாக அப்பிரதேச செயலாளருக்கு இன்று அனுப்பிவைத்துள்ள கடிதத்திலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அந்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

 “மட்டக்களப்பு மாவட்டம் கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச செயலாளர் பிரிவில் மாங்கன்று நடுவதற்காக ஊர்காவல் துறையினர் 25 ஏக்கர் காணி கோரி விண்ணப்பித்துள்ளதாக அறிகின்றேன்.

இச் செயற்பாடுகள் மாகாண காணி ஆணையாளரின் ஆலோசனையில் இடம்பெறுகிறது. ஊர்காவல் துறையினருக்கு காணி இங்கு வழங்க வேண்டிய அவசியம் இல்லை. தேவை எனில் அவர்கள் பொலன்னறுவை மாவட்டத்தில் பெற்றுக் கொள்ளலாம் ஏன் இங்கு இவர்கள் காணி கோர வேண்டும். அத்தோடு இவர்களுக்கு இப்போது தொழில் மரம் நடுகை தொழிலா என சந்தேகிக்க தோன்றுகின்றது.

உண்மையில் இதில் ஏதோ ஒரு இன ரீதியான திட்டம் அமைந்துள்ளது. எனவே எமது மாவட்ட மக்கள் பலர் காணி இன்றி கஷ்டப்படும் நிலையில் இவர்களுக்கு காணி வழங்க முடியாது. ஆகவே பிரதேச செயலகம்  காணி வழங்கும் செயற்பாட்டை நிறுத்த வேண்டும் என கோருகின்றேன் பதிலை எதிர்பார்க்கின்றேன்" என குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த கடிதத்தின் பிரதிகள் கிழக்கு மாகாண ஆளுநர் ரோகித போகொல்லாகம, கிழக்கு மாகாண காணி ஆணையாளர் டி.டி.அனுர தர்மதாஸ, மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மா.உதயகுமார் ஆகியோருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அநுராதபுர திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:47:53
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38