இலங்கை சிறையில் அடைக்­கப்­பட்டு ள்ள தமி­ழக மீன­வர்­களை விடு­தலை செய்­யக்­கோரி சென்­னையில் உள்ள இலங்கை தூத­ரக அலு­வ­ல­கத்தை மீன­வர்கள் முற்­று­கை­யிட்டு இன்று போராட்டம் நடத்தவுள்­ள­தாக அறி­வித்­துள்­ளனர்.

இலங்கை சிறையில் அடைக்­கப்­பட்­டுள்ள இராமேஸ்­வரம், புதுக்­கோட்டை, நாகப்­பட்­டினம் பகு­தி­களை சேர்ந்த 27 மீன­வர்­க­ளையும், 79 பட­கு­க­ளையும் விடு­விக்க வேண்டும். இலங்கை நீதி­மன்றம் விடு­வித்து கடலில் மூழ்கி சேத­ம­டைந்த 18 பட­கு­க­ளுக்கு நிவா­ரணம் வழங்க வேண்டும் உட்­பட பல்­வேறு கோரிக்­கை­க­ளுக்கு மத்­தி­ய–­மா­நில அர­சுகள் நட­வ­டிக்கை எடுக்க வலி­யு­றுத்தி இராமேஸ்­வரம் மீன­வர்கள் கால­வ­ரை­யற்ற வேலை நிறுத்­தத்தில் ஈடு­பட்­டுள்­ளனர்.

இதன் ஒரு பகு­தி­யாக இன்று  சென்­னையில் உள்ள இலங்கை தூத­ரக அலு­வ­ல­கத்தை முற்­று­கை­யிட்டு போராட்டம் நடத்த மீன­வர்கள் முடிவு செய்­துள்­ளனர். இதில் பங்­கேற்­ப­தற்­காக இராமேஸ்­வரம், தங்­கச்­சி­மடம், பாம்பன் ஆகிய பகு­தி­களை சேர்ந்த 200க்கும் மேற்­பட்ட மீனவர்கள் இப் போராட்டத்தில் கலந்துக்கொள்ள சென்னைக்கு வருகை தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.