(நா.தனுஜா)

எதிர்வரும் காலங்களில் வர்த்தக ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் இலங்கைக்கு தேவையான உதவிகளை வழங்கத் தயாராகவுள்ளோம் என உலக வங்கி குழுமத்தின் உயர் மட்ட விசேட நிபுணர் மார்க்ஸ் பார்டலி ஜோன்ஸ் தெரிவித்தார்.

இணையம் மூலமான வர்த்தக தகவல் மையத்தினை ஆரம்பிக்கும் நிகழ்வு கிங்ஸ்பெரி கொழும்பு, ஹோட்டலில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

உலக வங்கி மற்றும் அவுஸ்திரேலிய அரசாங்கம் என்பவற்றின் உதவியுடன் முன்னெடுக்கப்பட்டுள்ள வர்த்தக தகவல் மையமானது வர்த்தகத்துறை சார்ந்தவர்களுக்கு நேரடியான நன்மையினை வழங்கும் வகையில் அமைந்துள்ளது. இத்திட்டத்திற்கு உலக வங்கி விரிவான அனுசரைனையை வழங்கியுள்ளது

அத்தோடு இலங்கையில் புதிய தேசிய ரீதியான வர்த்தக கொள்கையினை முன்னெடுப்பது தொடர்பான திட்டங்களிலும் உலக வங்கி கவனம் செலுத்தி வருகின்றது. எதிர்காலத்திலும் இலங்கைக்கு தேவையான உதவிகளைவழங்கத் தயாராக உள்ளோம் என்றார்.