உடல்நலக் குறைவால் தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த குணச்சித்திர  நடிகர் குமரிமுத்து, தனது 77 ஆவது வயதில் இன்று அதிகாலை காலமானார். 

‘ஊமை விழிகள்’, ‘முள்ளும் மலரும்’, ‘பொங்கி வரும் காவேரி’, ‘இது நம்ம ஆளு’, ‘புது வசந்தம்’ உள்ளிட்ட 500க்கும் மேற்பட்ட பல படங்களில் காமெடி மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார்.

சினிமாவில் இவருடைய சிரிப்புதான் மிகப்பெரிய பிரபலம். இவரின் வித்தியாசமான சிரிப்பு அனைவரையும் பயமுறுத்துவது மட்டுமில்லாமல் ரசிக்கவும் வைக்கும். 

சினிமாவில் புகழ்பெற்ற நட்சத்திமாக திகழ்ந்த குமரி முத்து, அரசியல் கட்சியான திமுகவில் இணைந்து நட்சத்திர பேச்சாளராகவும் திகழ்ந்து வந்தார். 

இந்நிலையில் கடந்த சில நாட்களாகவே உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த குமரி முத்து சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி வைத்தியசாலையல் சிகிச்சை பெற்று வந்தார். 

இந்நிலையில், இன்று அதிகாலை  சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.