(எம்.எம்.மின்ஹாஜ்  ஆர்.யசி)

இலங்கை கிரிக்கெட் அணிக்கு மிகவும் அதிஷ்டமான மைதானமாக உள்ள காலி கிரிக்கெட் மைதானத்தை இடமாற்றும் எந்த தீர்மானமும் இல்லைஇ மைதானத்தில்  அமைக்கப்பட்டுள்ள மஹிந்த ராஜபக் ஷ பார்வையாளர் அரங்கையே அகற்றுவது குறித்து தீர்மானம் எடுக்கப்படவுள்ளது என விளையாட்டுத்துறை அமைசசர் பைசர் முஸ்தபா தெரிவித்தார். கொக்கலையும் புதிதாக சர்வதேச கிரிக்கெட் மைதானம் புனரமைக்கப்படும் எனவும் அரசாங்கம் உறுதியளித்துள்ளது. 

காலி மைதானம் இடமாற்றப்படுவதாக நேற்று பாராளுமன்றத்தில் பொது எதிரணி உறுப்பினர்கள் கேள்வி எழுப்பிய நிலையில் அதற்கு பதில் தெரிவிக்கும் வகையில் அரசாங்க தரப்பினர் இதனைக் குறிப்பிட்டனர்.

  காலி கிரிக்கெட் மைதானம்  இலங்கை வீரர்களுக்கு மிகவும் அதிஷ்டமான மைதானமாகும். தற்போது இடம்பெற்று வரும் தென்னாபிரிக்க தொடர்பில்கூட காலியின் சிறந்த வெற்றியை பெற்றுள்ளோம். அடுத்து இங்கிலாந்து அணியுடன் போட்டியும் இடம்பெறவுள்ளது.

இந்நிலையில் உடனடியாக மைதானத்தை மாற்ற வேண்டும் அல்லது கட்டிடங்களை அகற்ற வேண்டும் என்ற கருத்துக்களை விடவும் எமது கிரிக்கெட் அணிக்கான தகுதியான மைதானத்தை கொடுப்பதே முக்கியமானதாகும். அதேபோல் அடுத்த ஆண்டு நவம்பர் மாதம் வரையில் யுனெஸ்கோவிற்கு நாம் பதில் கூறக்கூடிய கால அவகாசம் உள்ளது.

அதேபோல் மைதானத்தை நாம் ஒரு போதும் இடம்மாற்ற போவதில்லை. ஆனால் அனாவசிய கட்டிடங்களை அகற்ற முடியும். எவ்வாறு இருப்பினும் இரண்டு வாரங்களில் இந்த விவகாரங்கள் குறித்து முழுமையான தீர்மானம் என்னவென்பதை தெரிவிக்க இப்போது ஆராய்வுக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது எனவிளையாட்டுத்துறை அமைச்சர் பைசர்முஸ்தபா குறிப்பிட்டார்.