"எதிர்ப்பை தாண்டி அரசியலமைப்பை அமுல்படுத்துவோம்" 

Published By: Vishnu

20 Jul, 2018 | 02:57 PM
image

(நா.தினுஷா) 

எவ்வாறான எதிர்ப்புக்கள் எழுந்தாழும் புதிய அரசியல் சீர்த்திருத்தைத்தை அமுல்படுத்துவதற்கான சகல நடவடிக்கைகளையும் முன்னெடுப்போம் என பாராளுமன்ற உறுப்பினர் துஷார இந்துநில் அமரசேன தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில், 

நாட்டில் இனவாதத்தை தூண்டுவதற்காகவும் நாட்டை இரண்டாக பிரிப்பதற்காகவும் அரசாங்கத்தின் முயற்சியாகவே இந்த அரசியலமைப்பு சீர்த்திருந்தம் அமைந்துள்ளதாக குற்றம் சுமத்தியே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, மகா சங்கத்தினர் மற்றும் தென் பகுதியினர் அனைவரும் அரசியலமைப்பு சீர்திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

ஆனால் 2015 ஆம் ஆண்டு இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரத்தை குறைத்து பாராளுமன்றத்துக்கும் மக்களுக்கும் பொறுப்புக்கூறும் வகையில் பிரதமரை உருவாக்குவதாக மக்களுக்கு உறுதி வழங்கியிருந்தது. இந்த உறுதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை மையப்படுத்தியும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை மையப்படுத்தியும் முன்வைக்க வில்லை. எதிரகாலத்தில் ஆட்சிசெய்யும் தலைமைகளை வழி நடத்தும் நோக்கிலேயே இந்த யோசனையை முன்வைக்கப்பட்டது.

மக்களுக்கு மூன்று வருடங்களுக்கு முன்பு வழங்கிய வாக்கு நிறைவேற்றப்பட வேண்டுமானால் பழைய அரசியலமைப்பிலுள்ள ஏற்பாடுகளில் மாற்றம் கொண்டுவரப்பட வேண்டும். அதனை மையப்படுத்தியே புதிய  அரசியலமைப்பு சீர்த்திருத்தத்தை உருவாக்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டோம்.

எனவே எவ்வாறான எதிர்ப்புக்கள் எழுந்தாழும் புதிய அரசியல் சீர்த்திருத்தைத்தை அமுல்படுத்துவதற்கான சகல நடவடிக்கைகளையும் முன்னெடுப்போம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஜனாதிபதி தேர்தல் வாக்களிப்பின் பின்னர் வன்முறை...

2024-09-17 11:01:23
news-image

சர்வதேச தேர்தல் கண்காணிப்புக் குழு -...

2024-09-17 10:59:15
news-image

தேர்தல் ஆணைக்குழுவின் வழிகாட்டுதல்களை மீறும் ஊடக...

2024-09-17 10:56:15
news-image

நிற பேதங்கள், கட்சி பேதங்கள் இன்றி...

2024-09-17 10:27:36
news-image

வெல்லவாய பகுதியில் மரம் முறிந்து வீழ்ந்ததில்...

2024-09-17 10:22:19
news-image

தவறாக வழிநடத்தி அரகலய போராட்ட காணொளிகளை...

2024-09-17 09:51:43
news-image

5 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை...

2024-09-17 10:44:57
news-image

சம்மாந்துறையில் சகோதரர்களுக்கிடையில் துப்பாக்கி சூடு :...

2024-09-17 07:40:15
news-image

இன்றைய வானிலை

2024-09-17 06:10:26
news-image

 நாட்டை மீண்டும் இருளில் தள்ளும் வரிசை...

2024-09-17 02:24:56
news-image

ஜனாதிபதி எப்போதும் தேர்தலுக்காக அன்றி நாட்டு...

2024-09-17 02:18:58
news-image

நேரடி வெளிநாட்டு முதலீட்டை ஈர்க்க நாட்டில்...

2024-09-17 02:07:33