“அவளின் சம்மதத்துடனேயே எல்லாம் நடந்தது, பலமுறை உறவு கொண்டுள்ளோம்”: கூச்சமின்றி வாக்குமூலம் அழித்த பாதிரியார்

Published By: J.G.Stephan

20 Jul, 2018 | 02:39 PM
image

கேரள மாநிலம் கோட்டயம் பகுதியில் உள்ள கிருஸ்தவ தேவாலயத்தில்,  நிர்வாகத்திற்கு ஒருவர் எழுதிய கடிதம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாகியது.

அக்கடிதத்தில்,  பாவமன்னிப்பு கேட்க வந்த தனது மனைவியை 5 பாதிரியார்கள் பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றச்சாட்டு கூறப்பட்டது.

இந்த விவகாரம் கேரளாவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியதுடன்,  இவ்விவகாரத்தில் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க மகளிர் ஆணையம் உத்தரவிட்டது.

இந்த நிலையில் போலிஸார் தங்களை கைது செய்யாமல் இருக்க முன்கூட்டியே பிணை வழங்கக் கோரி கற்பழிப்பு குற்றம் சாட்டப்பட்ட பாதிரியார்கள் உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். பின்னர்,  இந்த மனுக்களை தள்ளுபடி செய்து நீதிபதி ராஜா விஜயராகவன் உத்தரவிட்டார்.

இதனையடுத்து இவ்விவகாரத்தில் கடந்த வாரம் பாதிரியார் ஜோப் பி மாத்யூ மற்றும் ஜான்சன் பி மாத்யூவை போலிஸார் கைது செய்தனர்.

இதில் குற்றஞ்சாட்டப்பட்ட பாதிரியார்கள் ஆபிரகாம் வர்க்கீஸ் மற்றும் ஜேம்ஸ் கே.ஜார்ஜ் ஆகியோர் முன்கூட்டியே பிணை வழங்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனு மீதான விசாரணை தொடங்கிய உச்ச நீதிமன்றம், மறு உத்தரவு வரும் வரை பாதிரியார்களை கைது செய்யக் கூடாது என்று கேரளா போலிஸாருக்கு நேற்று உத்தரவிட்டது.

இதில் பாதிரியார் ஜேம்ஸ் தாக்கல் செய்திருந்த மனுவில் ” அந்தப் பெண்ணின் குடும்பத்தை எனக்கு பல ஆண்டுகளாய் தெரியும்.

அந்தப் பெண்ணுடன் பல முறை உறவில் ஈடுபட்டுள்ளேன். இவை எல்லாமே அந்தப் பெண்ணின் முழு சம்மதத்துடன்தான் நடைபெற்றது.

இப்போது யாரோ மிரட்டியுள்ளதால் என் மீது அபாண்டமான புகாரை கூறியுள்ளார். பாவ மன்னிப்பு குறித்து அந்தப் பெண் ஏதும் தெரிவிக்கவில்லை எனவே எனக்கு முன்கூட்டியே பிணை வழங்க  வேண்டும்” என பாதிரியார் மனுவில் குறிப்பிட்டுள்ளதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52