முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவை நீமன்றில் ஆஜராகுமாறு  கொழும்பு மாவட்ட மேலதிக நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

மெதமுலனயில் கோத்தபாயவின் தந்தை டீ. ஏ. ராஜபக்ஷவின் நினைவு காட்சியகம் ஒன்றை அமைப்பதற்கு அரச நிதியை பயன்படுத்தியதாக தெரிவித்து குற்றவியல் விசாரணை பிரிவு கோத்தபாய ராஜபக்ஷவிற்கு எதிராக நீதவான் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்தது.

இக் குற்றச்சாட்டை எதிர்த்து கோத்தபாய ராஜபக்ஷவினால் மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில், இன்றைய தினம் குறித்த வழக்கினை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ உள்ளிட்ட எழு பேரை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 7 ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு கொழும்பு மாவட்ட மேலதிக நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.