இறுதிப்பாவ­னைக்­காக பண்­டங்­க­ளையும் சேவை­க­ளையும் பயன்­ப­டுத்­துவோர் நுகர்வோர் ஆவர். ஒரு நாட்டின் சனத்­தொகை அந்­நாட்டின் நுகர்­வோ­ராகக் கரு­தப்­ப­டுகின்­றனர். தற்­போது இலங்­கையின் மொத்த நுகர்வோர் எண்­ணிக்கை கிட்­டத்­தட்ட 21 மில்­லியன் ஆகும். இவ்­வாறு நுகர்­வோரின் தேவை­க­ளையும் விருப்­பங்­க­ளையும் அறிந்து நுகர்வோரின் திருப்­தியை இலக்­காகக் கொண்டு செயற்­படும் வணி­கங்கள் தமது உற்­பத்­தி­யினை விற்­பனை செய்ய பல்­வேறு நுட்­பங்­களை கையா­ளு­கின்­றன.இவ்­வா­றான நுட்­பங்­களில் விளம்­ப­ரப்­ப­டுத்­தலும் மிக முக்­கிய இடத்­தினை வகிக்­கின்­றது. விளம்­ப­ரங்­க­ளி­னூ­டாக நுகர்­வோ­ருக்கு பொருள் பற்­றிய தக­வல்கள் வழங்­கப்­ப­டு­கின்­றன. இத­னூ­டாக நுகர்வோர் பொருள் பற்­றிய விப­ரங்­களை இல­கு­வாக அறிந்து கொள்­ளக் ­கூ­டி­ய­தாக இருக்­கின்­றது.

இன்­றைய கால­கட்­டத்தில் விளம்­ப­ரங்­களின் பங்­க­ளிப்பு வணி­கங்­களின் வெற்­றி­யி­லக்­கிற்கு பெரும்­பங்­கினை வகிக்­கின்­றது. காரணம் அதிக போட்­டி­யினை கொண்­டி­ருக்கும் வணிகச் சந்­தையில் போட்­டி­யினை எதிர்­கொண்டு தமது பொருட்கள் சேவைக்­கான வாய்ப்­பினை பெற்­றுக்­கொள்ள வணி­கங்கள் விளம்­ப­ரத்தை ஒரு உத்­தி­யாகக் கையா­ளு­கின்­றன.

தற்­போது விளம்­ப­ரங்­க­ளா­னவை ஒரு பொருளின் தன்­மையை நுகர்­வோ­ருக்கு தெரி­விக்கும் வகையில் மட்­டுமே அமை­யாமல் மெரு­கூட்­டப்­பட்ட (DECEPTIVE ADS OR PUFFERY) வகை­யிலும் அமை­யப் ­பெ­று­கின்­றன. காரணம் தனது பொருட்­களின் விற்­ப­னையை அதி­க­ரிப்­ப­தற்­காக விற்­ப­னை­யா­ளர்கள் பொய்­யான அல்­லது மித­மிஞ்­சிய தக­வல்­க­ளையும் விளம்­ப­ரங்­க­ளி­னூ­டாக தெரிவிக்க முற்­ப­டு­கின்­றனர்.

இவ்­வா­றான விளம்­ப­ரங்­க­ளி­னூ­டாக நுகர்­வோர் கவ­ரப்­ப­டு­கின்­றனர். காரணம் அவர்­களின் எதிர்­பார்ப்­புக்­களும் விருப்­பங்­களும் அதி­க­மாகக் காணப்­ப­டு­கின்­றன. இதனால் விளம்­ப­ரங்கள் இல­கு­வான வழியில் நுகர்­வோரின் மனங்­களை கவர்­கின்­றன. இத­னூ­டாக இன்­றைய வணிக நிறு­வ­னங்கள் புதிய பொருட்­களை அறி­முகம் செய்­வ­திலும் சந்­தையில் பின்­தங்­கிய பொருட்­களின் விற்­ப­னையை மேம்­ப­டுத்­தவும் விளம்­ப­ரங்­களை சிறந்­த­தொரு வழி­யாக கையா­ளு­கின்­றனர்.

தற்­போது விளம்­ப­ரங்கள் சகல துறை­க­ளிலும் தனது பாரிய பங்­க­ளிப்­பினை செய்­து­வ­ரு­கின்­றன. பொது­வாக நுகர்­வோரின் நுகர்வு நட­வ­டிக்­கை­யா­னது இரண்டு வகை­யின,

1.உணர்ச்­சி­வ­சப்­பட்ட நுகர்வு (IMPULSIVE BUYING)

2.நிர்ப்­பந்­தப்­ப­டுத்­தப்­பட்ட நுகர்வு (COMPULSIVE BUYING)

விளம்­ப­ரங்­க­ளா­னவை பொது­வாக நுகர்­வோரின் உணர்ச்­சி­வ­சப்­பட்ட நுகர்­விலே அதிக தாக்கம் செலுத்­து­கின்றன. அதா­வது வழியில் செல்லும் போது தென்­படும் விளம்­பர பல­கையில் காணப்­படும் உண­விற்­கான (FAST FOOD) விளம்­ப­ர­மா­னது நுகர்­வோரை நுகர்­விற்­காக தூண்­டு­கி­றது. மேலும் இன்­றைய உல­க­மா­னது கணினி மய­மாகி வரு­கின்­றது. இதற்­கேற்ப புதிய இலத்­தி­ர­னியல் சாதன விளம்­ப­ரங்கள் மக்­களின் வாழ்க்கைத் தரத்­திற்­கேற்ப நுகர்வில் பங்­க­ளிப்புச் செய்­கின்­றது. உதா­ர­ண­மாக, தொடு­திரை கைத்­தொலை பேசி­களின் (TOUCH SEREEN MOBILE PHONES) நுகர்வு அதி­க­மாக காணப்­ப­டு­கி­றது. காரணம் இவை உலகம் எங்கள் கையில் என்ற அடிப்­ப­டையில் வெளியி­டப்­படும் விளம்­ப­ரங்­களின் தாக்­க­மாகக் கூட இருக்­கலாம்.

எந்­த­வொரு துறைசார் வியா­பா­ர­மா­னாலும் விளம்­ப­ரங்­க­ளி­னூ­டாகவே மக்­களை கவர முற்­ப­டு­கின்­றார்கள். ஒரு சில தனியார் வகுப்­புக்­களை பொறுத்­த­வ­ரையில் அதி­க­ மா­ண­வர்­களை கவரும் வகையில் தர­மான சேவை குறை­வான விலையில் என்ற அடிப்­ப­டையில் தர­மற்ற சேவை கூடிய விலையில் வழங்­கப்­ப­டு­கின்­ற­து என்­ப­தனை நாம் அறிவோம். அதே போல வெளிநாட்டு வேலைவாய்ப்­புக்­க­ளுக்­கான விளம்­ப­ரங்கள் வெளிநாட்டு வேலை வாய்ப்­பினை எதிர்­பார்க்­கும அல்­லது உள்­நாட்டில் வேலை­யற்­ற­ ­வேலை தேடிக் கொண்­டி­ருக்கும் மக்­க­ளி­டையே பெரிதும் தாக்­கத்தை செலுத்­து­கி­றது. மக்கள் பொது­வாக அதிகம் சம்­பா­திக்கும் ஆசையில் வெளிநா­டு­களுக்கு சென்று பெரும் துன்­பத்­தையே சம்­பா­திக்­கி­றார்கள் என்­ப­தனை நாம் கண்­கூடாகப் பார்த்­தி­ருக்­கிறோம். (குறிப்­பாக வீட்டுப் பணிப்­பெண்கள்) இவ்வாறான நிலைமையானது அதிக சம்பளம் ஆடம்பர வாழ்க்கை என்ற எதிர்பார்ப்பினாலும் தமது எதிர்ப்பார்ப்பிற்கு ஏற்ற வகையில் அவர்களுக்கு வழங்கப்பட்ட விளம்பரத்தினாலும் கிடைக்கப்பட்ட வெகுமதிக ளாகும். எனவே நுகர்வோர் அறிவுக் கூர்மையுடன் தமது நுகர்வு நடவடிக்கையினை மேற்கொள்வது அவசியமா கின்றது. காரணம், போலியான பொருள், சேவை நுகர்விலிருந்து பாதுகாத்துக் கொள் ளவும் சிறந்த நுகர்வு நடவடிக்கையில் ஈடுபடவும் நுகர்வோர் சற்று விழிப்புணர்வுடன் செயற்பட வேண்டியது அவசியமான தொன்றாகின்றது.