மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்திலுள்ள மக்­களின் சுகா­தார நலனைக் கருத்தில் கொண்டு இந்­திய அர­சாங்­கத்­தால் மூவா­யி­ரத்து நானூறு மல­ச­ல­கூ­டங்கள் அமைப்­ப­தற்­கான ஒப்­பந்தம் நேற்று  இந்­திய உயர்ஸ்­தா­னிகர் காரி­யா­ல­யத்தில் கைச்சாத்திடப்பட்டது.

இது குறித்து கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில்  தொடர்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இந்தியாவும் இலங்கையும் ஒரு சுகாதாரத்துறை செயற்றிட்டத்திற்கான ஒரு புரிந்துணர்வு உடன்படிக்கையை நேற்று கைச்சாத்திட்டன. இந்த உடன்படிக்கையின் பிரகாரம் மட்டக்களப்பு மாவட்டத்தில் இந்­திய நாட்டின் 300 மில்­லியன் ரூபா நிதி ஒதுக்­கீட்டில் 3400 கழிவறைகள் நிர்மாணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த புரிந்துணர்வு உடன்படிக்கையை இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் தரண்ஜித்சிங் சந்து, மீன்பிடி நீரியல் வளமூல அபிவிருத்தி மற்றும் கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் ரேணுக்கா ஏக்கநாயக்க ஆகியோர் கைச்சாத்திட்டனர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.