காலி சர்வதேச கிரிக்கெட் அரங்கு அகற்றப்படமாட்டாதென அமைச்சர் சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

காலி சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கு அகற்றப்படாதெனவும் குறிப்பிட்ட கட்டிடம் மாத்திரமே அகற்றப்படுமெனவும் அமைச்சர் சாகல ரத்நாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.

காலி நகரத்தை உலக மரபுரிமைகள் நகரமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நிலையில்,  காலி சர்வதேச கிரிக்கெட் அரங்கத்திற்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டிருந்தது. இந்நிலையில், உலக மரபுரிமையையும் கிரிக்கெட் மைதானத்தையும் பாதுகாக்கும் பொறுப்பு உள்ளதென இலங்கை அணியின் முன்னாள் தலைவர்களான மஹேல ஜெயவர்தன, அர்ஜுன ரணதுங்க ஆகியோர் ஆதங்கம் தெரிவித்திருந்தனர்.

உலக மரபுரிமை இடத்தை பாதுகாப்பது மட்டுமல்லாது காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தை தொடர்ந்தும் பயன்படுத்த சரியான செயற்திட்டத்தை விளையாட்டுத்துறை அமைச்சரும் கிரிக்கெட் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென முன்னாள் கிரிக்கெட் அணித் தலைவரும் பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சருமான அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார். 

இந்நிலையிலேயே அமைச்சர் சாகல ரத்நாயக்க மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.