கேரளா – கோட்டயம் மாவட்டம் வழூவூரைச் சேரந்த கோமா நிலையிலிருந்த தாய்க்கு பிறந்த ஆண் குழந்தையால் தாயின் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த பெண் 3 மாத கர்ப்பிணியாக இருக்கும் போது கடந்த ஜனவரி மாதம் மாடிப்படி ஏறும் பொழுது கீழே விழுந்ததனால் தலையில் பலமாக அடிப்பட்டு கோமா நிலைக்கு சென்றுவிட்டார்.

குறித்த பெண்ணின் இயல்பு வாழ்க்கை முடங்கிய நிலையில் பேச்சு இயக்கம் இன்றி வைத்தியர்களால் தீவிரமாக கண்கானிக்கப்பட்டு வந்துள்ளார். மேலும் பெண்ணின் கணவரும் மனைவியின் அருகிலிருந்து கண்ணும் கருத்துமாக கவனித்துக்கொண்டுள்ளார்.

நிறைமாத கர்ப்பிணி கோமா நிலையிலிருப்பது குடும்பத்தையே சோகத்தில் ஆழ்த்தினாலும் கூட அவரது வைற்றில் வளரும் குழந்தை ஆரோக்கியமாக இருப்பதால் ஓரளவேனும் ஆருதலுடன் இருந்துள்ளனர்.

இந் நிலையில் கடந்த 14ஆம் திகதி தனியார் மருத்துவமனை ஒன்றில் குறித்த பெண்ணுக்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது.

குழந்தைக்கு எல்வின்; என பெயரிட்ட குழந்தையின் தந்தை பாலுட்டுவதற்காக குழந்தையை தாயின் அருகில் படுக்க வைத்து பாலுட்டச் செய்த போது குழந்தையும் பாலை குடிக்க ஆரம்பித்ததும் தாயின் முகத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

உடனே வைத்தியர்களுக்கு அறிவிக்கப்பட்டு தாயை பரிசோதித்த வைத்தியர்கள் அவரின் உடல் நிலையில் தேர்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும் தொடர்ந்து சிகிச்சையளித்தால் வெகு விரைவில் தாய் குணமடைவார் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

குழந்தையின் தந்தை,

"குழந்தை அழும் போதும், பால் குடிக்கும் போதும் பெத்தனா(மனைவி)வின் முகத்தில் உணர்ச்சிகள் மாறுவது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. குழந்தையை பார்த்து அவள் சிரிக்கிறாள். விரைவில் எனது மனைவி இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவார் என்ற நம்பிக்கை தற்போது அதிகரித்துள்ளது” என மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.