ஈரா­னிய கிரா­ம­மொன்­றி­லி­ருந்த அனைத்து ஆண்­க­ளுக்கும் போதை­வஸ்­துக்­க­ளுடன் தொடர்­பு­டைய குற்­றச்­சாட்­டுக்­களின் கீழ் மர­ண­தண்­டனை நிறை­வேற்­றப்­பட்­டுள்­ள­தாக மனித உரிமைக் குழுவொன்று தெரி­விக்­கி­றது.

அந்­நாட்டின் பெண்கள் மற்றும் குடும்ப விவ­கா­ரத்­துக்­கான உப தலை­வ­ரான ஷஹின்­தோகத் மொலா­வெர்டி தெரி­விக்­கையில், சிஸ்­டான் மற்றும் பலு­சிஸ்தான் பிராந்­தி­யத்­தி­லுள்ள கிரா­ம­மொன்றைச் சேர்ந்த ஆண்­க­ளுக்கே போதை­வஸ்து கடத்­தலில் ஈடு­பட்ட குற்­றச்­சாட்டில் இவ்­வாறு மர­ண­தண்­டனை நிறை­வேற்­ற­ப்பட்­ட­தாக கூறினார்.

அந்த ஆண்கள் அனை­வ­ருக்கும் ஒரே­ச­ம­யத்தில் மர­ண­தண்­டனை நிறை­வேற்­றப்­பட்­டதா அல்­லது வெவ்­வேறு கால கட்­டத்தில் மர­ண­தண்­டனை நிறை­வேற்­றப்­பட்­டதா என்­பது அறி­யப்­ப­ட­வில்லை.

உலகில் அதி­க­ளவு மர­ண­தண்­ட­னை­களை நிறை­வேற்றும் நாடுகள் பட்­டி­யலில் இரண்­டா­வது இடத்­தி­லுள்ள ஈரானில் நிறை­வேற்­றப்­படும் மர­ண­தண்­ட­னை­களில் மூன்றில் இரு மடங்­கா­னவை போதை­வஸ்து கடத்­தலுடன் தொடர்­பு­பட்­டவை என தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

கடந்த வரு­டத்தில் அந்­நாட்டில் நிறை­வேற்­றப்­பட்ட 947 தூக்குத் தண்­ட­னை­க­ளில் சுமார் 600 தண்­ட­னைகள் போதை­வஸ்துக் கடத்­த­லுடன் தொடர்புபட்டவையாகும்.

அதேசமயம் அந்நாட்டில் இந்த வருடத்தில் 31 பேருக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட் டுள்ளதாக மனித உரிமைக் குழுவான றிப் பிறைவ் தெரிவிக்கிறது.