சவுதி அரேபியா - அல் பஹா பகுதியைச் சேர்ந்த 70 வயதான நபர் ஒருவர் கடந்த 30 வருடங்களாக தூங்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த நபர் தனக்கு ஏற்பட்டுள்ள விசித்திரமான நிலையின் காரணமாக பல வைத்தியர்களை நாடியுள்ளார். இருப்பினும் இது வரையில் அவரது நிலைக்கான காரணம் கண்டறியப்படவில்லை.

சவுதி இராணுவத்தில் சேவையாற்றிய காலகட்டத்தில் தொடர்ந்து 20 நாட்கள் குறித்த நபர் தூங்காமல் கண்விழித்துள்ளார்.

இராணுவ சேவையை முடித்துக் கொண்ட பின்னர் வைத்தியசாலைக்கு சென்று தனது நிலையை வைத்தியர்களிடம் கூறியுள்ளார்.

அதனைத் தொடரந்து பல சோதனைகளை மேற்கொண்ட உள்ளூர் வைத்தியர்களால் நோயிற்கான காரணத்தை கண்டு பிடிக்க முடியாது போக 4 நாடுகளைச் சேர்ந்த சிறப்பு வைத்தியர்கள் குழு ஒன்றும் பரிசோதித்துள்ளது.

அவர்களாலும்  உரிய காரணத்தை கண்டறிய முடியவில்லை. எனினும்  குறித்த நபரின் மன அழுத்தமே காரணமாக இருக்கலாம் என தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளித்து வந்தாலும் இதுவரை அவரால் தூங்க முடியவில்லை.

அல் பஹா பகுதி ஆட்சியருக்கு இவரது நிலை குறித்து தெரிய வர குறித்த நபரை அழைத்து விசாரித்துள்ளார். ஆட்சியரிடம் தமக்கு ஒரு கார் மாட்டும் போதும் என தெரிவித்ததை அடுத்து அல் பஹா ஆட்சியர் புதிய கார் ஒன்றை பரிசாக அளித்ததோடு எஞ்சிய காலம் முழுவதும் அவரது அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்து தருவதாகவும் வாக்குறுதி அளித்துள்ளார்.