இத்தாலிக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றினை மேற்கொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று காலை 9.45 மணியளவில் இலங்கையை வந்தடைந்தார்.

கடந்த 15 ஆம் திகதி இத்தாலிக்கு விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உரோமில் நடைபெற்ற உகல வனப் பாதுகாப்பு குழுவின் 24 ஆவது கூட்டத் தொடரில் கலந்துகொண்டு உரை நிகழ்த்தி தனது இத்தாலி பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்தார்.

அதனையடுத்து திறந்த அரசாங்க பங்குடமை தலைவர்களின் சந்திப்பில் பங்குகொள்வதற்காக கடந்த 17 ஆம் திகதி இத்தாலியிலிருந்து ஜோர்ஜியாவுக்கு மூன்று நாள் விஜயத்தை மேற்கொண்ட ஜனாதிபதி மைத்திரி, ஜோர்ஜிய ஜனாதிபதி கிளோர்ஜி மார்க்வெலஸ்விலியை (Giorgi Margvelashvili) சந்தித்து இருநாடுகளுக்கும் இடையிலான பொருளாதார தொடர்புகளை புதிய வழிமுறைகள் ஊடாக வலுப்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடினார்.

இந் நிலையில் இரு நாடுகளுக்குமான உத்தியோகபூர்வ விஜயத்தினை முடித்துக் கொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று காலை 9.45 மணியளவில் கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தார்.