தென்னாபிரிக்க அணிக்கெதிரான 2 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்துள்ளது.

இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிக்கு எதிராக காலி மைதானத்தில்  இடம்பெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 278  ஓட்டங்களால் வெற்றி பெற்றது.

இந்நிலையில் இரு அணிகளுக்கு மிடையிலா 2 ஆவது டெஸ்ட் போட்டி இன்று கொழும்பு எஸ்.எஸ்.சி. மைதானத்தில் ஆரம்பமாகின்றது.

இப்போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணியின் தலைவர் சுரங்க லக்மால் முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தார்.

சுரங்க லக்மால் இப்போட்டியில் இலங்கை அணிக்கு தலைமை தாங்குகின்றார். அதேவேளை, சந்தகனுக்கு பதிலாக அகில தனஞ்சய அணியில் இணைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் துடுப்பெடுத்தடிவரும் இலங்கை அணி விக்கெட் இழப்பின்றி 50 ஓட்டங்களைப்பெற்றுள்ளது.