வவுனியா நொச்சிமோட்டை பாலத்தின் ஒருபகுதி துண்டம் உள்ளிறங்கியுள்ளமையால் அப்பகுதியில் போக்குவரத்தில் ஈடுபடும் வாகன சாரதிகள் மிகுந்த அவதானத்துடன் பயணிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இப்பாலமானது வீதி அபிவிருத்தி அதிகார சபைக்குட்பட்ட பகுதியில் அமைந்திருப்பதுடன் ஏ9 பிரதான வீதியில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு போன்ற பகுதிகளுக்கு செல்லும் வாகனங்களின் பிரதான போக்குவரத்து மையமாக அமைந்துள்ளது.

இந்த பாலம் அடிக்கடி இவ்வாறு சேதமடைவதாகவும், பின்னர் தற்காலிகமாக அதிகாரிகளால் சேதமடைந்த பகுதி மட்டும் திருத்தப்படுவதாகவும், தவிர நிரந்தரமாக அப்பாலம் அமைப்பதில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அசமந்தப் போக்குடனேயே உள்ளதாக பயணிகள் விசனம் தெரிவிக்கின்றனர்.