ஆசியக் கிண்­ணத்தில் நடப்பு சம்­பி­ய­னாக கள­மி­றங்­கிய இலங்கை அணி நடப்பு ஆசியக் கிண்­ணத்தில் முதல் தோல்­வியைத் தழு­விக்­கொண்­டது. அதே­வேளை இந்த தோல்­வியால் இலங்கை அணி இரு­ப­துக்கு 20 கிரிக்கெட் வர­லாற்றில் முதல் முறை­யாக பங்­க­ளா­தே­ஷிடம் நேற்று தோல்­வி­ய­டைந்­தது என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

ஆசியக் கிண்ண இரு­ப­துக்கு 20 கிரிக்கெட் போட்டி பங்­க­ளா­தேஷில் நடை­பெற்று வரு­கி­றது. இதில் இலங்கை– பங்­க­ளாதேஷ் அணிகள் மோதிய 5ஆவது லீக் ஆட்டம் நேற்று மிர்­பூரில் நடை­பெற்­றது. இந்தப் போட்­டியில் இலங்கை அணி 23 ஓட்­டங்­களால் அதிர்ச்சி தோல்­வி­ய­டைந்­தது. இந்தப் போட்டி வரை இவ்­விரு அணி­களும் 4 இரு­ப­துக்கு 20 போட்­டி­களில் மோதி­யுள்­ளன. அனைத்துப் போட்­டி­க­ளிலும் இலங்கை அணிதான் வெற்­றி­பெற்­றுள்­ளது.

இந்­நி­லையில் நேற்று நடை­பெற்ற போட்­டியில் நாணய சுழற்­சியில் வெற்­றி­பெற்ற பங்­க­ளாதேஷ் அணி முதலில் துடுப்­பெ­டுத்­தாடத் தீர்­மா­னித்­தது. இலங்கை அணித் தலைவர் லசித் மலிங்க காயம் கார­ண­மாக நேற்­றையப் போட்­டியில் விளை­யா­ட­வில்லை.

அதன்­படி முதலில் கள­மி­றங்­கிய பங்­க­ளாதேஷ் அணி 20 ஓவர்­களில் 7 விக்­கெட்­டுக்­களை இழந்து 147 ஓட்­டங்­களைப் பெற்­றுக்­கொண்­டது. பங்­க­ளா­தேஷின் தொடக்க வீரர்­க­ளான முக­மது மிதுனும், சர்க்­காரும் ஓட்­ட­மேதும் பெறாத நிலையில் ஆட்­ட­மி­ழந்­தனர். மூன்­றா­வ­தாக கள­மி­றங்­கிய சப்பீர் ரகு­மானும், அல் ஹசனும் பங்­க­ளா­தேஷை சரி­வி­லி­ருந்து மீட்­டனர். அதி­ர­டி­யாக ஆடிய சப்பீர் 80 ஓட்­டங்­களைக் குவித்தார். அல் ஹசன் 32 ஓட்­டங்­களை எடுத்தார். இறு­தியில் அந்த அணி 7 விக்­கெட்டுக்­களை இழந்து 147 ஓட்­டங்­களைக் குவித்­தது.

148 ஓட்­டங்கள் பெற்றால் வெற்றி என்ற இல­கு­வான வெற்றி இலக்­குடன் கள­மி­றங்­கிய இலங்கை அணி 20 ஓவர்­களில் 8 விக்­கெட்­டுக்­களை இழந்து 124 ஓட்­டங்­களை மாத்­திரம் பெற்று 23 ஓட்­டங்­களால் தோல்­வியைத் தழுவி ஏமாற்­றி­யது.

இந்தத் தோல்­வி­யோடு, பங்­க­ளா­தே­ஷிடம் இலங்கை அணி முதல் முறை­யாக வீழ்ந்­தது என்ற மோச­மான பதி­வையும் ஆசியக் கிண்ணத் தொடரில் பதிந்­தது.

இலங்கை அணியின் ஆரம்பத் துடுப்­பாட்ட வீரர்­க­ளாக கள­மி­றங்­கிய சந்­திமால் மற்றும் தில்ஷான் ஆகியோர் சற்று ஓட்­டங்­க­ளைப்­பெற்­றுக்­கொ­டுக்க, ஜய­சூ­ரி­யவும் தன் பங்­கிற்கு 26 ஓட்­டங்­களைப் பெற வெற்­றியை நோக்கி மெல்ல நகர்ந்­தது இலங்கை.

ஆனாலும் 37 ஓட்­டங்­களைப் பெற்­றி­ருந்த வேளையில் சந்­திமால் ஆட்­ட­மி­ழக்க அத்­தோடு ஜய­சூ­ரி­யவும் ஆட்­ட­மி­ழக்க, அதி­லி­ருந்து இலங்கை அணியின் விக்­கெட்­டுக்கள் மள­ம­ள­வென சரிய ஆரம்­பித்­தன. இவர்­களைத் தவிர தில்ஷான் (12), மெத்­தியூஸ் (12), சானக்க(14), கபு­கெ­தர ஆட்­ட­மி­ழக்­காமல் 14 ஓட்­டங்கள் என பெற்­றனர். ஏனை­ய­வர்கள் அனை­வரும் ஒற்றை இலக்க ஓட்­டத்­துடன் ஆட்டமிழந்தனர்.

இறுதியில் இலங்கை அணி 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 124 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது. பந்துவீச்சில் மிரட்டிய அல் அமீன் ஹொசைன் 3 விக்கெட்டுக்களையும், ஷகிப் 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.