ஜனாதிபதியை பதவி நீக்குவதற்கு ஏற்பாடு

Published By: Vishnu

20 Jul, 2018 | 07:49 AM
image

(எம்.எம்.மின்ஹாஜ், ஆர்.யசி)

புதிய  அரசியலமைப்பிற்கான நிபுணர்கள் குழுவின் வரைபினை எம்.ஏ.சுமந்திரனும் ஜயம்பதி விக்கிரமரத்னவும் யாருக்கும் தெரிவிக்காமல் தமது நோக்கங்களை நிறை வேற்றுவதற்காக தயாரித்துள்ளனர் என்று சபையில் சுதந்திரக்கட்சியின் சுயாதீன அணியினரும் பொது எதிரணியினரும்  குற்றஞ்சாட்டியதுடன், ஜனாதிபதியை பதவி நீக்கு வதற்கான  ஏற்பாடுகளையும்  வரைபில் இவர்கள்  உள்ளடக்கியுள்ளதாகவும் விசனம் தெரிவித் தனர்.  வழிநடத்தல் குழுவை இவர்கள்  ஏமாற்றுவதற்கு எத்தனித்துள்ளனர். 

நிபுணர் குழு­வி­னரின் இணக்­க­மின்றி வெளி­நாட்டில் உள்­ள­வர்­களின் கையொப்­பத்தை போலி­யாக இட்டு வரை­பினை சமர்ப்­பித்­துள்­ளனர்.  திருட்டுத்தன­மாக வரை­பினை தயா­ரித்து தமது அர­சியல் நோக்­கங்­களை நன­வாக்கி கொள்­வ­தற்­காக எம்மை ஏமாற்­ற­ பார்க்­கின்­றனர் என்றும் இவர்கள்  குற்­றம்­ சு­மத்­தினர்.  

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று வியா­ழக்­கி­ழமை சுதந்­திரக் கட்­சியின் 16 பேர் கொண்ட சுயா­தீன அணியின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் தயா­சிறி ஜய­சே­கர ஒழுங்கு பிரச்­சி­னை­யொன்றை முன்­வைத்து எழுப்­பிய குற்­றச்­சாட்­டு­களை அடுத்து சர்ச்­சை­யான நிலை‍மை ஏற்­பட்­டது.

இதன்­போது தயா­சிறி ஜய­சே­கர எம்.பி குறிப்­பி­டு­கையில்,

அர­சி­ய­ல­மைப்பின் வழி­ந­டத்தல் குழு நேற்று (நேற்று முன்தினம்) கூடி­யது. இதன்­போது நிபு­ணர்கள் குழுவின் வரைபு அறிக்கை சமர்ப்­பிக்­கப்­பட்­டுள்­ளது. இதில் நிபு­ணர்­க­ளுக்கு மத்­தியில் இணக்கம் இல்­லாத தன்மை காணப்­ப­டு­வ­துடன் வழி­ந­டத்தல் குழு­விலும் இணக்­க­ப்பாடு இல்­லாத நிலைமை ஏற்­பட்­டுள்­ளது. 

நிபுணர் குழுவில் பத்து பேர் உள்­ளனர். அதில் ஆறு பேர் கைச்­சாத்­திட்­டுள்­ளனர். நான்கு பேர் கைச்­சாத்­தி­ட­வில்லை. இதன்­படி பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான எம்.ஏ சுமந்­திரன், ஜயம்­பதி விக்­கி­ர­ம­ரத்ன, சுரேன் பெர்னாண்டோ ஆகி­யோரே இந்த வரைபை தயா­ரித்­துள்­ளனர். இந்த வரைபில் என்­று­மில்­லாத வகையில் ஜனா­தி­ப­தியை பத­வியில் இருந்து நீக்­கு­வ­தற்கு பிர­தமர், எதிர்க்­கட்சி தலைவர் மற்றும் சபா­நா­யகர் ஆகி­யோ­ருக்கு அதி­காரம் வழங்­கி­யுள்­ளனர். 

இது ஜனா­தி­ப­தியை நீக்கும் சதி திட்­ட­மாகும். அதற்­கான ஏற்­பா­டு­களை வரைபில் உள்­ள­டக்­கி­யுள்­ளனர். இதனை ஏற்­று­க்கொள்ள முடி­யாது. இருவர் சேர்ந்து நாட்டின் அர­சி­ய­ல­மைப்­பினை உரு­வாக்க பார்­க்கின்­றனர். அர­சி­ய­ல­மைப்பு பணிகள் உரு­வாக்க அனைத்து கட்­சி­களும் இணைந்­துள்ள நிலையில் மூவர் மாத்­திரம் இணைந்து அர­சி­ய­ல­மைப்­பினை உரு­வாக்­கு­­வ­தாயின்    ஏனைய கட்­சி­களின் நிலைமை என்ன? அவ்­வா­றாயின் நாட்டின் நிலைமை என்ன? பெரும்­பான்­மை­யி­னரின் ஆத­ரவு  இதற்கு அவ­சி­ய­மாகும் என்றார்.

போலி­யான கையொப்பம் 

இத­னை­ய­டுத்து எழுந்த கூட்டு எதிர்க்­கட்­சியின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் மஹிந்­தா­னந்த அளுத்­க­மகே,

நிபு­ணர்கள் குழு­வி­னரின் இணக்­க­மின்றி திருட்டுத்தன­மாக ஆவ­ண­மொன்றை தயா­ரித்­துள்­ளனர். நிபுணர் குழுவின் உறுப்­பினர் ஒருவர் ஆறு­ மா­தங்­க­ளாக வெளி­நாட்டில் உள்ளார். அவர் நாட்­டிற்கு வர­வில்லை. ஆனால் அவரின் கையொப்பம் இடப்­பட்­டுள்­ளது. இது எப்­படி நடக்கும். இது சாதா­ரண விட­ய­மாக கருத முடி­யாது. நாட்டின் அர­சி­ய­ல­மைப்­புடன் சம்­பந்­தப்­பட்ட விட­ய­மாகும். போலி­யான கையொப்­ப­மிட்டு புதிய அர­சி­ய­ல­மைப்­பினை அவ­ச­ர­மாக கொண்டு வர முனை­கின்­றனர். ஆகவே இது தொடர்பில் அவ­தானம் செலுத்த வேண்டும் என்றார்.

இதன்­போது எழுந்த தினேஷ் குண­வர்­தன எம்.பி. கூறு­கையில்,

வழி­ந­டத்தல் குழுவில் நானும் உறுப்­பி­ன­ராக உள்ளேன். தயா­சிறி ஜய­சே­கர முன்­வைத்த குற்­றச்­சாட்டு பார­தூ­ரமான விட­ய­மாகும். எம்.ஏ. சுமந்­தி­ரனும் ஜயம்­பதி விக்­கி­ர­ம­ரத்­னவும் இணைந்தே வரைபு அறிக்­கையை தயா­ரித்­துள்­ளனர். இந்த வரை­புக்கு நிபு­ணர்கள் குழு­விலும் இணக்­க­மில்லை. இது திருட்டுத்தன­மாக செய்­யப்­பட்ட திட்­ட­மாகும். ஜனா­தி­ப­தியை நீக்­கவும் திட்டம் தீட்­டி­யுள்­ளனர். இதனை சாதா­ரண பிரச்­சி­னை­யாக எடுத்­துக்­கொள்ள முடி­யாது.இது தொடர்­பான விசேட அவ­தானம் செலுத்த வேண்டும். அர­சியல் யாப்­பு­ ச­பையின்  தலைவர் என்ற வகையில் சபா­நா­யகர் தலை­யீடு செய்ய வேண்டும். மேலும் இந்த விவ­காரம் பிர­த­ம­ருக்கு கூட தெரி­யாது என்றார்.

தெளி­வு­ப­டுத்­திய அநுர எம்.பி.

இத­னை­ய­டுத்து தெளி­வு­ப­டுத்­திய எதிர்க்­கட்­சியின் பிர­தம கொற­டாவும் மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் தலை­வ­ரு­மான அநுர குமார திஸா­நா­யக்க,

அர­சி­ய­ல­மைப்பு சபையின் தலை­வ­ராக சபா­நா­யகர் கரு ஜய­சூ­ரி­யவே உள்ளார். வழி­ந­டத்தல் குழுவில் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவே தலை­வ­ராவார்.   வழி­ந­டத்தல் குழுவின் காரி­யங்­களை இல­கு­ப­டுத்த  நிபு­ணர்கள் குழுவை நிய­மித்தோம்.   இதன்­படி நேற்று (நேற்று முன்தினம்) வழி­ந­டத்தல் குழுவில் நிபு­ணர்­ கு­ழுவின் வரைபு அறிக்கை சமர்ப்­பிக்­கப்­பட்­டது. 

அர­சி­ய­ல­மைப்பு வரைபு அல்ல. அடுத்த கட்ட நகர்­வு­களை முன்­னெ­டுத்து செல்­வ­தற்­காக வரைபு ஒன்று முன்­வைக்­கு­மாறு கேட்­டு­ கொள்­ளப்­பட்­டதன் பிர­காரம் இந்த அறிக்கை  முன்­வைக்­கப்­பட்­ட­தாகும். இதன்­போது நிபு­ணர்கள் குழுவின் அறிக்­கைக்கு இணக்கம் இல்­லாத நிலைமை ஏற்­பட்­டது. ஏனெனில் நிபு­ணர்­ கு­ழு­விலும் இணக்கம் இல்­லாத நிலைமை ஏற்­பட்­டுள்­ளது. ஆகையால் அந்த வரைபை நிரா­க­ரித்து இரு வாரத்தில் பூரண வரைபு அறிக்­கையை சமர்ப்­பிக்­கு­மாறு வழி­ந­டத்தல் குழு­வினால் கோரப்­பட்­டது. இது தான் நடந்த உண்­மை­யாகும் என்றார்.

கபீர் ஹாஷிம் விளக்கம்

இத­னை­ய­டுத்து நெடுஞ்­சாலை மற்றும் வீதி அபி­வி­ருத்தி அமைச்சர் கபீர் ஹாஷிம் குறிப்­பி­டு­கையில்,

நாட்­டுக்கு பாத­க­மான எந்­த­வொரு அர­சி­ய­ல­மைப்­பி­னையும் நாம் கொண்டு வர மாட்டோம். வழி­ந­டத்தல் குழுவில் முன்­வைக்­கப்­பட்ட நிபுணர் குழு அறிக்கை நிரா­க­ரிக்­கப்­பட்­டுள்­ளது. ஆகையால் இதனை அலட்­டி ­கொள்ள தேவை­யில்லை. அர­சி­ய­ல­மைப்பு பணி­களை மறை­மு­க­மாக நாம் முன்­னெ­டுக்­க­ மாட்டோம். நியூயோர்க் டைம்ஸ் விவா­தத்தை மூடி மறைப்­ப­தற்­கான முட்­டா­ள த­ன­மான செயற்­ப­டு­கின்­றனர் என்றார். 

இதன்­போது தயா­சிறி ஜய­சே­கர மீண்டும் எழுந்து குறிப்­பி­டு­கையில்,

புதிய அரசியலமைப்பினை பலவந்தமாக தயாரிக்க    முடியாது. பெரும்பான்மையினரின் ஆதரவு அவசியமாகும். இந் நிலையில் ஜனாதிபதியை பதவி நீக்குவதற்கு சபாநாயகருக்கும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இது சாதாரணமான பிரச்சினையில்லை என்றார்.

சபாநாயகரின் பதில்

இதன்போது கருத்து தெரிவித்த சபாநாயகர் கரு ஜயசூரிய நான் ஒருபோதும் ஜனாதிபதியை பதவி நீக்கும் வகையில் செயற்பட மாட்டேன். அதற்கான நோக்கம் எனக்கு இல்லை. அரசியலமைப்பு தொடர்பாக சபையின் அவதானத்திற்கு கொண்டு வந்த விவகாரம் தொடர்பில் தான் அவதானம் செலுத்துகின்றேன் என்று  சுட்டிக்காட்டினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46
news-image

சுகாதாரத்துறையில் மருந்துப்பொருள் மோசடி மட்டுமல்ல ;...

2024-04-16 17:05:24
news-image

தமிழ் மக்களின் சுமைதாங்கும் தர்ம தேவதையாக...

2024-04-16 16:32:21
news-image

நுவரெலியா - லிந்துலை சிறுவர் பராமரிப்பு...

2024-04-16 16:28:10
news-image

சட்டவிரோதமாக காணிக்குள் நுழைந்து பெண்ணின் 14...

2024-04-16 16:23:03
news-image

நானுஓயா ரயில் நிலையத்தில் பயணிகள் அவதி!

2024-04-16 16:05:39
news-image

புத்தாண்டு நிகழ்வில் கிரீஸ் மரம் சரிந்து...

2024-04-16 16:02:02
news-image

முட்டை விலை அதிகரிப்பினால் கேக் உற்பத்தி...

2024-04-16 14:59:40
news-image

உலகில் மிகவும் சுவையான அன்னாசிப்பழத்தை இலங்கையில்...

2024-04-16 14:28:01
news-image

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வழங்கப்படும் உணவுகள்...

2024-04-16 14:22:41
news-image

மரக்கறிகளின் விலைகள் குறைவடைந்தன!

2024-04-16 14:35:09