(இரோஷா வேலு) 

வாழ்க்கை செலவு அதிகரிப்பை கண்டித்தும் அதற்கு நிகரான சம்பள உயர்வை வலியுறுத்தியும் இன்று கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பதாக முன்னிலை சோஷலிச கட்சியினர் ஆர்ப்பாட்டமொன்றினை மேற்கொண்டனர்.

இன்று மாலை கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் அனைத்து தொழிலாளர்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையிலான நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டிருந்ததோடு, வரிச்சுமை குறை, வாழ்க்கைச் சுமையை குறை, வாக்குறுதிகளை நிறைவேற்று, மறைமுக வரி அறவிடும் திட்டங்களை கைவிடு போன்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளையும் கையில் ஏந்தியவாறு ஆர்ப்பாட்டக்காரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.