ஆபிரிக்க நாட்டைச் சேர்ந்த போதகர் ஒருவர் மத சடங்குகளுக்காக சுமார் 675 சிறுவர்களை நரபலி கொடுத்துள்ளார்.
ஆப்பிரிக்க நாடான கானாவைச் சேர்ந்த மத போதகர் ஒருவர் சுமார் 675 சிறுவர்களை மத சடங்குகளுக்காக நரபலி கொடுத்துள்ளதாக தெரிவித்துள்ள சம்பவம் அப்பகுதியி்ல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த தகவலை அந்த மத போதகரே காணொளி ஒன்றின் மூலம் வெளியிட்டுள்ளமை பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
கடந்த 17 ஆண்டுகளாக சாத்தானுடன் வாழ்ந்து வருவதாக குறிப்பிட்டுள்ள குறித்த மத போதகர் தனது நரபலி சடங்கிற்காக சாத்தானை வழிபாடும் வைத்தியர்களும் தாதிகளுமே குறித்த சிறுவர்களை தனக்கு வழங்கியதாக அவர் அந்த காணொளியில் குறிப்பிட்டுள்ளார்.
முகமுடி அணிந்தவாறு காட்சிதரும் அவர் இதுவரை சடங்குகளுக்காக 675 பேரை கொலை செய்துள்ளதாகவும் அதில் பெரும்பாலானோர் சிறுவர்கள் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் குறித்த சம்பவமானது கானாவில் எந்த பகுதியில் நடைபெற்றது, எப்போது நடைபெற்றது உள்ளிட்ட தகவல்களையும் அவர் வெளியிட மறுத்துள்ளார். தாம் தீய சக்தியுடன் பிறந்தவர் எனவும் தமது சக்தியை தக்கவைத்துக் கொள்ளவே நரபலி கொடுத்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM