(எம்.சி.நஜிமுதீன்)

கூட்டு எதிர்க்கட்சி சார்பில் ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கவுள்ள வேட்பாளர் குறித்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வெளியிட்டுள்ள அறிக்கை எனக் குறிப்பிட்டு போலியான அறிக்கையொன்று வெளியாகியுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் விஜித பேருகொட தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

கூட்டு எதிர்க்கட்சி சார்பில் ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கவுள்ள வேட்பாளர் குறித்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வெளியிட்டுள்ள அறிக்கை எனக் குறிப்பட்டு போலியான அறிக்கையொன்று வெளியாகியுள்ளது. எனினும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவ்வாறான அறிவித்தல் ஒன்றை வெளியிடவில்லை. ஆகவே அந்த போலியான அறிவித்தல் தொடர்பில் பொலிஸ் தலமையகத்தில் நேற்று முறைப்பாடு செய்வதற்கு முயற்சி எடுக்கப்பட்டது. 

எனினும் பொலிஸ் தலைமையம் அம்முறைப்பாட்டை ஏற்கவில்லை. குறித்த முறைப்பாடு கணனி குற்றம் எனக்கருதியதுடன் அது குறித்து முறையீடு செய்வதற்கு வேறு பிரிவொன்றுள்ளதாகக் குறிப்பிட்டு அம்முறைப்பாட்டை பொலிஸ் தலைமையகம் ஏற்கவில்லையெனவும் அவர் தெரிவித்தார்.