அமெரிக்காவின் அருங்காட்சியகத்தில்  இருந்த 2500 ஆண்டுகள் பழமைவாய்ந்த  பண்டைய கால  கற் சிற்பம் மடிக்கணினி  பயன்படுத்தப்படுவது போன்று செதுக்கப்பட்டுள்ளதால்  2500 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்தே மடி கணினி பாவனை இருந்ததா? என்ற சந்தேகத்தேடு கலந்த ஆச்சரியம் அனைவர் மத்தியிலும் ஏற்பட்டுள்ளது.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் லேஸ் ஏன்ஜல்ஸிலுள்ள J. Paul Getty அருங்காட்சியகத்தில் பண்டைய கால சிற்பங்கள் பல பேணப்பட்டு வருகின்றன.

அங்குள்ள சிற்பம் ஒன்றில் சிறுமியிடம் ஒரு பொருள் உள்ளது. அதை பெண் ஒருவர் திறந்து பார்ப்பது போன்று உள்ளது. அதை சற்று கூர்ந்து கவனித்தால் மடிக்கணினி போன்றுள்ளது. அதுமட்டுமின்றி அதில் USB மற்றும் சார்ஜ் போடுவதற்கு ஏற்ற வகையில் இரண்டு துளைகளும் காணப்படுகின்றன. 

இது தொடர்பான வீடியோ  யூ டியூப் சேனலில் வெளியாகி சில மணி நேரங்களிலேயே 13000 பார்வையாளர்களால் தர வரிசைப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த வீடியோவைக் கண்ட மக்கள் பலரும் ஆச்சரியத்தில் கமெண்ட் செய்ய ஒரு சிலர் இது மடிக்கணினி கிடையாது எனவும், பண்டைய காலத்தில் பயன்படுத்தப்பட்ட  நகைப் பெட்டியாக இருக்கலாம் அல்லது புத்தகமாக இருக்கலாம் என்று கூறி வருகின்றனர்.