பெர்ப்பச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் உரிமையாளரான அர்ஜுன் அலோசிஸ் சிறைவைக்கப்பட்டிருந்த அறையிலிருந்து மீட்கப்பட்ட சிம் அட்டைகள் பல குற்றச்செயல்களுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி தொடர்பில் பெர்ப்பச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் உரிமையளார் அர்ஜுன் அலோசியஸ் மற்றும் அந் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி கசுன் பலிசேன ஆகியோர் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் அர்ஜுன் அலோசியஸ் தங்க வைக்கப்பட்டிருந்த சிறை அறையில் இருந்து தொலைபேசி சிம் அட்டைகள் சில மீட்கப்பட்டன.

இவ்வாறு மீட்கப்பட்ட சிம் அட்டைகள் பல குற்றச்செயல்களுக்கு பயன்படுத்தப்படடுள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களம் இன்று அறிவித்துள்ளது.