(நா.தினுஷா) 

முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனின் பாராளுமன்ற உறுப்புரிமை தொடர்பான இறுதி முடிவுகள் இவ்வார இறுதிக்குள் கிடைக்கும் என சபாநாயகர் அறிவித்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி அறிவித்துள்ளது.

இது குறித்து அக் கட்சியினர் மேலும் தெரிவிக்கையில்,

பாராளுமன்ற உறுப்பினரின் உறுப்புரிமையை எவறாலும் தன்னிச்சியாக அகற்ற முடியாது. பாராளுமன்றத்தை பிரதிநிதிதுவபடுத்தும் எந்தவொரு கட்சிக்கும் அந்த உரிமை வழங்கப்படவுமில்லை. அவ்வாறு உறுப்புரிமை நீக்கப்பட வேண்டுமானால் சட்ட ரீதியாக குறித்த உறுப்பினரின் உறுப்புரிமை நீக்க வேண்டும். 

ஐக்கிய தேசிய கட்சி என்றும் தன்னிச்சையாக முடிவுகளை எடுப்பதில்லை. அதற்காகவே கட்சியின் தலைமையில் ஒழுக்காற்று குழுவொன்று நியமிக்ப்பட்டு ஒழுக்காற்று ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன. 

ஒழுக்காற்று குழுவின் முடிவுகள் கிடைத்தவுடன் சபாநாகர், விஜயகலா மகேஸ்வரனின் பாராளுமன்ற உறுப்புரிமையை குறித்து சரியான தீர்மானித்தை அறிவிப்பார். அத்துடன் இவ்வாரத்துக்குள் அவரின் பாராளுமன்ற உறுப்புரிமை தொடர்பான தீர்வுகள் கிடைக்கப்பெறும் என்றும் தெரிவித்துள்ளனர்.