(எம்.மனோசித்ரா)

எரிபொருள் விலை அதிகரிப்பு, மத்தள விமான நிலையத்தை இந்தியாவிற்கு விற்பனை செய்தல் மற்றும் மக்களுக்கு எதிரான அரசாங்கத்தின் சில செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளதாக லங்கா சமசமாஜக் கட்சியின் தலைவர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார். 

பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்த்தன தலைமையில் கூட்டு எதிரணிக்கும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுக்குமிடையில் விசேட சந்திப்பொன்று நேற்றிரவு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கட்சி அலுவலகத்தில் இடம்பெற்றது. இதன்போதே இந்த முடிவு எடுக்கபப்ட்டதாக பேராசிரியர் திஸ்ஸ விதாரண குறிப்பிட்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 

நல்லாட்சி அரசாங்கத்திற்கு எதிராக எமது எதிர்கால நடவடிக்கைகளை கூட்டணியாக இணைந்து முன்னெடுக்க இந்த சந்திப்பின் போது தீர்மானித்தோம். அதன்படி அடுத்த ஆகஸ்ட் மாதம் 17 ஆம் திகதி எமது ஆதரவாளர்கள் அனைவரையும் ஒன்று திரட்டி கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுக்க தீர்மானித்துள்ளோம் என்றார்.