மூளையையும் தண்டுவடத்தையும் இணைக்கும் பாலமாக செயற்படும் மோட்டார் நியூரான்கள் எனப்படும் செல்கள் பாரம்பரிய மரப கோளாறுகளால் பாதிக்கப்படும் போது முதுகெலும்பு தசைநார் பாதிப்பு ஏற்படுகிறது. 

இந்த பாதிப்புகளால் விழுங்குவதற்கும், சுவாசிப்பதிற்கும் தடை, இடையூறு, கோளாறு, சிரமம் போன்றவை ஏற்படலாம். இத்தகைய பாதிப்பு ஆறாயிரம் முதல் பத்தாயிரம் குழந்தைகளில் ஒருவருக்கு ஏற்படலாம். இதனை தொடக்கத்திலேயே கண்டறிந்தால் ஆறு மாத காலத்திற்கு தொடர் சிகிச்சையளிக்கப்பெற்றால் அவர்களை இந்த பாதிப்பிலிருந்து குணமடையலாம்.

வயதைப் பொறுத்தும், பரம்பரை, தசை பலவீனம், நோய் பரவும் வேகம் ஆகியவற்றைப் பொறுத்தும் இத்தகைய பாதிப்புகளை நான்கு வகைகளாக பிரிக்கலாம். 

இத்தகைய பாதிப்பிற்குள்ளான குழந்தைகள் நடக்க இயலாது அல்லது நடப்பதற்கு மிகவும் சிரமப்படுவார்கள்.

இவர்களின் மூட்டு, கை, தண்டுவடம், நுரையீரல் ஆகியவற்றின் வளர்ச்சியிலும் போதிய அளவிற்கு முன்னேற்றம் இருக்காது. இதற்காக தற்போது கண்டறியப்பட்டுள்ள புதிய வைத்திய சிகிச்சைகளால் தொடக்க நிலையில் கண்டறியப்பட்டால் குணப்படுத்த இயலும்.