மன்னார் நகர நுழைவாயிலில் உள்ள 'லங்கா சதொச' விற்பனை நிலைய வளாகத்தில் மனித எலும்புகள் அகழ்வு பணி இன்று 37ஆவது நாளாகவும்  முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

மன்னார் நீதவான் ரி.ஜே.பிராபாகரன் முன்னிலையில்  இடம் பெற்று வருகின்ற அகழ்வு பணிகளுக்கு விசேட சட்ட வைத்திய நிபுணர் டபில்யூ. ஆர்.ஏ.எஸ்.ராஜபக்ஷ தலைமை தாங்கிவருகின்றார்.

கடந்த மார்ச் மாதம் மன்னார் சதொச விற்பனை நிலைய கட்டுமானப் பணியின்போது மேற்கொள்ளப்பட்ட மணல் அகழ்வின்போது கண்டு பிடிக்கப்பட்ட மனித எச்சங்களைத் தொடர்ந்து இன்று  37 ஆவது தினமாக இவ் அகழ்வு பணி இடம்பெற்றது.

 இன்று பணியானது ஏற்கெனவே கண்டுபிடிக்கப்பட்டு அடையாளமிடப்பட்டிருந்த மனித எலும்புக் கூடுகள் மண்டையோடுகளை வெளியேற்றும் நோக்குடன் தொடர்நது துப்பரவு செய்யும் பணியாகவும் அகழ்வுக்காக மேலும் இவ்விடத்தை விரிவுப்படுத்துவதற்காக மணல் அகழ்வும் இடம்பெற்றது.