(நா.தனுஜா)

ஐக்கிய நாடுகள் அமைதிகாக்கும் படையில் இலங்கை இராவணுவத்தினர் பங்குகொள்வது மற்றும் அவர்களை பல்வேறு நாடுகளுக்கு பணிக்கு அனுப்புவது தொடர்பில் காணப்படும் குழப்பங்கள் தொடர்பில் கவனம் செலுத்துவதாக ஐக்கிய நாடுகள் சபை உறுதியளித்துள்ளது. 

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஐக்கிய நாடுகள்சபையின் அரசியல் விவகாரங்களுக்கான ஆசிய பசுபிக் பிராந்திய இயக்குநர் மேரி யமஷிடா மற்றும் இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனெரல் மகேஷ் சேனாநாயக்க ஆகியோருக்கிடையில் இராணுவ தலைமையகத்தில் இடம்பெற்ற சந்திப்பின் போதே யமஷிடா மேற்கண்டவாறு உறுதியளித்துள்ளார். 

2004 தொடக்கம் 2007 வரையான காலப்பகுதியில் ஐக்கிய நாடுகள் அமைதிகாக்கும் படையணியில் பணிபுரிந்த 134 இலங்கைப் படையினர் ஹெட்டியன் சிறுவர்களை பாலியல் ரீதியாகப் பயன்படுத்தினார்கள் எனும் குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே அமைதிகாக்கும் படையணிக்கு இலங்கைப்படையினரை அனுப்புவதில் இலங்கை பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.