பா. ஜ. க. அரசிற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை அ.தி.மு.க. ஆதரிக்காது என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்திருக்கிறார்.

இது தொடர்பாக மேலும் தெரிவித்ததாவது,

‘ காவிரி பிரச்சினையின்போது நாடாளுமன்றத்தில் எந்த கட்சியும் தமிழகத்திற்கு ஆதரவளிக்கவில்லை. அ.தி.மு.க உறுப்பினர்கள் தான் அதற்காக 22 நாட்கள் போராட்டம் நடத்தி சபையை நடைபெறவிடாமல் செய்தனர். அப்போது நமக்கு யாரும் ஆதரவு தரவில்லை.

ஆந்திர பிரச்சினைக்காக தெலுங்கு தேசம் கட்சி பா.ஜ.க. அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்துள்ளது. இந்த தீர்மானத்தை அ.தி.மு.க. ஆதரிக்காது.’ என்றார்.