நோர்வூட் பகுதியிலிருந்து மஸ்கெலியா பகுதியை நோக்கி தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற தனியார் பஸ் ஒன்று நோர்வூட் மஸ்கெலியா பிரதான வீதியில் நோர்வூட் நகரத்திற்கு அண்மித்த பகுதியில் பிரதான வீதியை விட்டு விலகி மண்மேட்டில் மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.

இவ்விபத்து  இன்று காலை 7.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.

வீதி வழுக்கல் தன்மையுடன் காணப்பட்டதனால் வாகனத்தை கட்டுப்படுத்த முடியாத காரணத்தினால் இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாக விசாரணைகளை மேற்கொண்டு வரும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்று காலை நோர்வூட் பகுதியிலிருந்து தோட்டம் ஒன்றிக்கு தொழிலாளர்களை ஏற்றி புறப்பட்டு சென்ற குறித்த பஸ்ஸே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதில் பயணித்த தொழிலாளர்கள் எவருக்கும் பாதிப்பு எற்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை நோர்வூட் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.