சைப்ரஸ் கடற் பகுதியில் அகதிகளை ஏற்றிச் சென்ற படகொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் படகில் பயணித்த 19 பேர் உயிரிழந்துள்ளதாக தெரியவருகிறது.

சைப்ரஸ் நாட்டின் வடக்கு கடற்பகுதியில் சுமார் 150 பேருடன் பயணித்த படகொன்றே இவ்வாறு கடலில் மூழ்கி விபத்துக்குள்ளாகியுள்ளது. இதன்போது படகில் பயணித்த 19 பேர் பரிதாபகரமாக உயிரிழந்ததுடன் 103 பேர் பாதுகாப்பாக மீட்க்கப்பட்டுள்ளனர். மேலும் காணாமல்போன 28 பேரை தேடும் பணிகள் தீவிரமாகவும் இடம்பெற்று வருகின்றது.

உயிரிழந்தவர்களின் சடலங்களை துருக்கியின் மெர்சின் நகருக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும் இந்த விபத்தில் சிக்கிய அகதிகள் எந்த நாட்டை சேர்ந்தவர்கள் என்பது பற்றிய தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.