இந்தியாவில் 2014 மற்றும் 2016 ஆகிய ஆண்டுகளில் மட்டும் 1 லட்சத்து 10 ஆயிரத்து 333 பாலியல் வன்முறை வழக்குகள் பதிவாகியுள்ளதாக மத்திய அமைச்சர் பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், அவ்வாறான குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கான தண்டனைகளையும் கடுமையாக்க வேண்டும் என்பன போன்ற வாதங்கள் பல்வேறு தரப்பினாலும் முன்வைக்கப்படுகிறது.

இந்நிலையில், பாராளுமன்றத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்ற சம்பங்கள் தொடர்பான எழுத்துப்பூர்வ கேள்விக்கு பதிலளித்த மத்திய அமைச்சர் கிரெண் ரிஜிஜு, 2014 முதல் 2016 வரையிலான காலகட்டத்தில் 1 லட்சத்து 10 ஆயிரத்து 333 பாலியல் வன்முறை வழக்குகள் நாடுமுழுவதும் பதிவாகி உள்ளதாக தெரிவித்தார்.

அவற்றில் 2016 ஆம் ஆண்டில் 38 ஆயிரத்து 947 வழக்குகளும், 2015 ஆம் ஆண்டில் 34 ஆயிரத்து 651 வழக்குகளும் மற்றும் 2014 ஆம் ஆண்டில் 36 ஆயிரத்து 735 வழக்குகளும் பதிவாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது.