நடிகர் பரத் நடிக்கும் புதிய படத்திற்கு அவருக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார் நடிகை அபர்ணா வினோத்.

இவர் விஜய் நடித்த ‘பைரவா ’ படத்தில் மருத்துவ கல்லுரியில் படிக்கும் மாணவியாக நடித்திருப்பார். மலையாள நடிகையான இவர் நடிகராக இருந்து இயக்குநராக அறிமுகமாகும் ஷரன் குமார் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் பரத்திற்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியிருககிறார்.

இதை பற்றி அவரிடம் கேட்டபோது,‘மிக்க மகிழ்ச்சி. டார்க் திரில்லர் ஜேனரில் உருவாகும் இந்த படத்தில் பரத்திற்கு ஜோடியாக நடிக்கிறேன். 

எமக்கு தற்போது 22 வயது தான் ஆகிறது. ஆனால் இந்த படத்தில் ஒரு குழந்தைக்கு தாயாகவும், ஆசிரியையாகவும் நடிக்கிறேன். படத்தின் இயக்குநர் ஷரன் கதை சொன்னதும் பிடித்துவிட்டது. ‘பைரவா ’படத்திற்கு பிறகு இந்த படத்தில் நடிக்கிறேன். ’ என்றார்.