(எம்.எம்.மின்ஹாஜ், ஆர்.யசி)

இலங்கை சிங்­கப்பூர் உடன்­ப­டிக்கை மூல­மாக 16 பில்­லியன் அமெ­ரிக்க டொலர் முத­லீ­டுகள் நாட்­டுக்குக் கிடைக்­கக்­கூ­டிய வாய்ப்­புகள் உரு­வா­கி­யுள்­ள­தா­கவும், முத­லீட்டு நிறு­வ­னங்­களின் வேலைத்­திட்­டங்­களை விரைவில் நடை­முறைப்படுத்­த உள்­ள­தா­கவும் சர்­வ­தேச வர்த்­தக மற்றும் மூலோ­பாய அபி­வி­ருத்­திகள் அமைச்சர் மலிக் சம­ர­விக்­கி­ரம தெரி­வித்தார்.உடன்­ப­டிக்கை நடை­மு­றைகள்,விதி­மு­றைகள் அனைத்­துமே இலங்கை சட்­டத்­துக்கு அமை­யவே முன்­னெ­டுக்­கப்­படும் எனவும்  அவர் குறிப்­பிட்டார். 

சிங்­கப்பூர் மற்றும் இலங்கைக்கு இடை­யி­லான சுதந்­திர வர்த்­தக உடன்­ப­டிக்கை குறித்து பொது எதி­ர­ணியின் தலைவர் தினேஷ் குண­வர்­த­ன­வினால் பாரா­ளு­மன்­றத்­துக்கு கொண்­டு­வ­ரப்­பட்ட சபை ஒத்­தி­வைப்புவேளை விவா­தத்தின்போது உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் இதனைக் குறிப்­பிட்டார்.  அவர் மேலும் கூறு­கையில், 

இலங்கை–-சிங்­கப்பூர்  உடன்­ப­டிக்கை குறித்து நாம் சகல தரப்­பு­டனும் கலந்­து­ரை­யா­டி­யுள்ளோம். கூட்டு எதிர்க்­கட்சி உறுப்­பி­னர்­களை அழைத்தோம். அவர்கள் வர­வில்லை. அதேபோல் இந்த உடன்­படிக்கை அமைச்­ச­ரவை அங்­கீ­கா­ரத்­துடன் நிறை­வேற்­றப்­பட்­டுள்­ளது. ஆகவே அமைச்­ச­ரவை அங்­கீ­காரம் இல்­லாது உடன்­ப­டிக்கை செய்­த­தாக கூறு­வது பொய்­யான கருத்­தாகும்.எனினும் சிலர் எந்­த­வித அடிப்­படை கார­ணி­களும் இல்­லாது குற்­றச்­சாட்­டுக்­களை முன்­வைத்து வரு­கின்­றனர். இவர்கள் அனை­வரும் அர­சாங்­கத்தின் செயற்­பா­டு­களை  குழப்பும்  வகையில் செயற்­பட்டு வரு­கின்­றனர். 

எமது நாடு   சுதந்­திரம் பெற்று 70 ஆண்­டுகள் கடந்தும் இன்­று­வரை எம்மால் தகு­தி­யான, தர­மான  பொரு­ளா­தார  தன்­மை­களை உரு­வாக்­கிக்­கொள்ள முடி­யாது உள்­ளது.ஆகவே எமது பொரு­ளா­தார  கொள்­கையை நாம் மாற்ற வேண்டும். தேசிய பொரு­ளா­தா­ரத்தை  மட்­டுமே கருத்தில் கொள்­ளாது ஏனைய நாடு­களின் அனு­ப­வங்­களை நாம் பெற்­றுக்­கொண்டு, அவர்­களின் கொள்­கை­யையும் பின்­பற்றி எமது பொரு­ளா­தா­ரத்தை பலப்­ப­டுத்தும் நட­வ­டிக்­கை­களை நாம் முன்­னெ­டுத்து வரு­கின்றோம்.இன்று எம்மால் பல­மான பொரு­ளா­தார தன்­மை­களில் பய­ணிக்கக் கூடிய வாய்ப்­புகள் கிடைத்­துள்­ளன. 2016,2017 ஆண்­டு­களில் நாம் பாரிய வரு­மா­னத்தை பெற்­றுள்ளோம். இப்­போது சிங்­கப்பூர் உடன்­ப­டிக்கை மூல­மாக மேலும் அதிக வரு­மா­னத்தை பெற்­றுக்­கொள்ள முடியும்.எவ்­வாறு  இருப்­பினும் ஆசி­யாவில் ஏனைய நாடு­களை விடவும் கீழ்­மட்ட பொரு­ளா­தார வரு­வாயில் தான் எமது நாடு உள்­ளது. சிங்­கப்பூர், வியட்நாம், தாய்­லாந்து,தாய்வான் ஆகிய நாடுகள் எம்மை விடவும் பல­மான நிலையில் உள்­ளன. ஆகவே நாம் வெகு­வாக எமது பொரு­ளா­தா­ரத்தை முன்­னெ­டுக்க வேண்­டிய தேவை உள்­ளது. 

நாம் உள்­நாட்டு உற்­பத்­திக்கு மட்­டுமே முக்­கி­யத்­துவம் கொடுத்தால் எம்மால் ஒரு­போதும் பல­மான பொரு­ளா­தார இலக்கை அடைய முடி­யாது. உலக பொரு­ளா­தார கொள்­கையில் அனைத்து நாடு­க­ளு­டனும் இணைந்து பய­ணிக்க வேண்டும். அத­னையே நாம் முன்­னெ­டுத்து வரு­கின்றோம். நாம் உள்­நாட்டு உற்­பத்­தி­களை கைவிடு­வ­தாக கூற­வில்லை. உள்­நாட்டு உற்­பத்­தி­க­ளுக்கு நாம் முக்­கி­யத்­துவம் கொடுக்கும் அதே நேரத்தில் சர்­வ­தேச கொள்­கை­களை உள்­ள­டக்­கிய வகை­யிலும் பய­ணிக்­க­வேண்டும் என்­பதே எமது நிலைப்­பா­டாகும். 

இப்­போது நாம் சிங்­கப்பூர் நிறு­வ­னத்­துடன் செய்து கொண்ட உடன்­ப­டிக்­கையின் இறுதித் தீர்­மா­னங்கள், சட்­டங்கள் அனைத்­தையும் நாமே முன்­னெ­டுப்போம். இங்கு வியா­பாரம் செய்யும் நிறு­வ­னங்கள் சிங்­கப்­பூரின் நிரந்­தர அல்­லது அர­சாங்­கத்தின் அங்­கீ­காரம் பெற்­றி­ருக்க வேண்டும். அதேபோல் இங்கு இரண்டு ஆண்­டுகள்  வரையில் வியா­பாரம் செய்ய முடியும். எவ்­வ­ளவு காலம் வரையில் நீடிக்கும் என்­பதை நாமே தீர்­மா­னிப்போம். அவர்­க­ளுக்­கான உறு­திப்­பத்­தி­ரங்­களும் வழங்­கு­வது குறித்து எமது சட்­ட­திட்­டங்­க­ளுக்கு அமை­யவே இடம்­பெறும். எவ்­வாறு இருப்­பினும் இலங்கை– -சிங்­கப்பூர் உடன்­ப­டிக்கை குறித்து தவ­றான விமர்­ச­னங்­களை முன்­வைக்க வேண்டாம். மக்கள் மத்­தியில் தவ­றான கருத்­துக்­களை கொண்டு செல்ல வேண்டாம். எமது அடுத்த சமு­தாயம் குறித்து சிந்­திக்க வேண்டும். அடுத்த சமூகம் இலங்­கையில் ஆரோக்­கி­ய­மான பொரு­ளா­தார கொள்கை, வாய்ப்­புகள் கொண்ட நாட்டில் வாழ வேண்டும் என்­ப­தையே நாம் கரு­து­கின்றோம். அதற்­கான பாது­காப்­பான சூழலை நாம் உரு­வாக்க வேண்டும். 

நாம் சர்­வ­தேச நாடு­க­ளுடன் உடன்­ப­டிக்கை செய்து கொள்­வதன் மூல­மாக பல்­வேறு சர்­வ­தேச முத­லீ­டுகள்  கிடைத்து வரு­கின்­றன.16 பில்­லியன்  அமெ­ரிக்க டொலர் முத­லீ­டுகள்  எமக்கு கிடக்கும் வாய்ப்பு இப்போது ஏற்பட்டுள்ளது.சிங்கப்பூர் மூலமாக இந்த முத­லீ­டுகள் கிடைக்கும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.எமது சட்ட திட்டங்களுக்கு அமைய சூழலியல் அனுமதி கிடைத்த பின்னர் இந்த வேலைத்திட்டங்களை முன்னெடுக்க நாம் நடவடிக்கை எடுப்போம். மக்களின் வாழ்வாதாரத்தை இதன் மூலமாக நாம் பலப்படுத்த  முடியும். அதற்கு அனைவரதும் ஒத்துழைப்புகளை எதிர்பார்க்கின்றோம் எனக் குறிப்பிட்டார்.