வெலிப்பன்ன பகுதியில் பாதாள உலக குழுவைச் சேர்ந்த முக்கிய உறுப்பினர்கள் நால்வரை கைதுசெய்துள்ளதாக பொலிஸ் ஊடகம் தெரிவித்துள்ளது.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்கள் மாகேந்துர மதுசின் உதவியாளரான 38 வயதுடைய ஜோசப் குமார எனப்படும் ஜோசா உட்பட நால்வரை கைது செய்த பொலிஸார், அவர்களிடமிருந்து 9 மில்லி மீற்றர் ரக  கைத்துப்பாக்கியையும் கைப்பற்றியுள்ளனர்.