வடக்கில் முகாம்களை ஒருபோதும் நீக்க மாட்டோம் - விஜயவர்தன

Published By: Vishnu

18 Jul, 2018 | 04:27 PM
image

(எம்.எம்.மின்ஹாஜ், ஆர்.யசி)

வடக்கில் இராணுவ முகாம்களை நீக்கக் கோரி அரசாங்கமோ பாதுகாப்பு அமைச்சோ எந்த கட்டளையும் பிறப்பிக்கவில்லை. வடக்கின் முகாம்கள் ஒருபோதும் நீக்கப்படப் போவதுமில்லை. அதேபோல் தேசிய பாதுகாப்பிற்கு எந்த அச்சுறுத்தலும் ஏற்படவில்லை என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்தன தெரிவித்தார். 

பாராளுமன்றத்தில் இன்று தினேஷ் குணவர்த்தன எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

இராணுவ படையணி குறிப்புகள் உள்ளிட்ட நிருவாக தீர்மானங்களை இராணுவமே முன்னெடுக்கின்றது, இதில் எந்தவித அரசியல் தலையீடுகள் இல்லை. இதனை தெளிவு படுத்தியே இராணுவத் தளபதி பாதுகாப்பு அமைச்சிக்கு கடிதம் அனுப்பியுள்ளார். 

இந்த நடவடிக்கைகள் மூலமாக தேசிய பாதுகாப்புக்கு எந்த பாதிப்பும் வரப்போவதில்லை. தேசிய பாதுகாப்பை கேள்விக்குட்படுத்தி நடவடிக்கை எடுக்கப்பட மாட்டாது என இராணுவத் தளபது தெரிவித்துள்ளார். 

யுத்தத்தின் பின்னர் சில படையணிகள் தனியாக இயங்குவது அவசியம் இல்லை என சுட்டிக்கட்டியுள்ள இராணுவம் அவ்வாறான படையணிகள் , குறைந்த படைகளை கொண்ட அணிகள் அனைத்தையும் ஒன்றிணைத்து ஒரு அணியாக மாற்றியமைக்கும் நடவடிக்கைகள் மட்டுமே முன்னெடுக்கப்படுகின்றது. அதை விடுத்து படையணியை இராணுவத்தில் இருந்து நீக்குவது நிக்கம் அல்ல. அவ்வாறு நீக்கப்படப்போவதும் இல்லை. இராணுவத்தின் எண்ணிக்கை அவ்வாறே இருக்கும். 

அதேபோல் வடக்கில் இருந்து எந்தவொரு இராணுவ முகாமும் நீக்கப்படுவதாக இராணுவம் கூறவில்லை. அரசாங்கமாக நாமும் அவ்வாறன எந்த நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவில்லை. எமக்கு எந்தத் தேவையும் இல்லாது நாம் இராணுவத்தை கட்டுபடுத்த வேண்டிய அவசியம் இல்லை என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17