"தற்போதைய அரசாங்கத்தின் கீழ் நாடு பாரிய அளவில் அழிவடைந்துள்ளது" என முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ அநுராதபுரத்தில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு  தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவால் மட்டுமே நாட்டு மக்களுக்கு தேவையான உரிமையையும், பயம், சந்தேகமற்ற வாழ்க்கையையும் வழங்க முடியும் என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

30 வருடங்களாக இடம்பெற்ற கொடிய யுத்தத்தை விடவும் 2004 இல் ஏற்பட்ட சுனாமி அழிவை விடவும் நாட்டில் தற்போது பாரிய அளவில் அழிவு இடம்பெற்று வருகிறது. ஒவ்வொருவரையும் மரண பயமும் பசியும் வாட்டுகிறது.

இந்த அழிவை தற்போதைய அரசாங்கத்தின் சகல துறைகளிலும் அவதானிக்க முடியும்" என்று அவர் மேலும் தெரிவித்தார்.