கடந்த சில நாட்க்களாக மங்கோலியாவில் அதிக அழுத்தம் மற்றும் வெப்பம் காரணமாக பூமி ஓரிடத்திலிருந்து இன்னோர் இடத்துக்கு இடம்பெயர்ந்து ஆறு போல் ஓடுகிறது என பகிரப்பட்ட காணொளிகள் பழைய காணொளி என தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

பூமி இடம்பெயரும் அதிசயம் எனக் குறிப்பிட்டு மங்கோலியாவில் சமூக வலைத்தளங்களில் இரு காணொளிகள் பகிரப்பட்டிருந்தன. குறித்த இந்த காணொளிக் காட்சிகளானது உண்மைதான் என்றாலும் பரப்பப்பட்ட வதந்திகளைப் போல் பூமி இடம்பெயரவில்லை. அத்துடன் இச் சம்பவமானது மங்கோலியாவில் நிகழவும் இல்லை என தற்போது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

முதலாவது காணொளிக் காட்சியில் கருமை நிற மண் ஆறுபோல் இடம்பெயர்ந்து ஓடுகிறது. இரண்டாவது காணொளியில் உயரமான குன்றின் ஒரு பகுதி மெதுவாக சரிந்து வீழ்வது நர்வது போல் சரிந்து வீழ்கின்றது.

இது குறித்து ஆராய்ந்த புவியல் ஆராய்வாளர்கள் நிலச்சரிவு வேகமாக அல்லது மெதுவாக நிகழும்போது இத்தகைய தோற்றம் ஏற்படும் என தெரிவித்துள்ளனர்.

எவ்வாறிருப்பினும் கடந்த 2017 ஆம் ஆண்டு சீனாவிலும் 2010 இத்தாலியிலும் நிகழ்ந்த இந்த நிலச்சரிவு காணொளிகளை கொண்டுதான் மங்கோலியாவில் பூமி நகர்ந்தது என பீதி எழுப்பப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.