இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் லொறியுடன் கார் மோதி விபத்துக்குள்ளானதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

குஜராத் மாநிலம், மோர்பி மாவட்டத்தில் அமைந்துள்ள ராஜ்கோட்-மோர்பி தேசிய நெடுஞ்சாலையில் தங்காரா எனும் பகுதியில் எதிரே வந்த லொறியின் மீது கார் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் குறித்த கார் திடீரென தீ பிடித்து எரிந்தது.

இதில், காரில் பயணித்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேர் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர். மேலும், ஒருவர் படுகாயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற பொலிஸார் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், குறித்த விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.